சென்னை: "அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைத்துக்கப்பட்டுள்ளது'' என்று என தமிழ்நாடு பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் நிலைப்பாடு என்ன? என்னென்ன மாற்றங்களுக்கு அரசு தயாராகி வருகிறது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் நேற்று 80க்கும் அதிகமான ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அமைச்சர் ராஜ்மோகன் தமிழக அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரம் ஒருநாள் பிரியாணி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறினார். இதுபற்றி அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: ''தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளியின் மதிய உணவு திட்டத்தை தங்களது சொந்த விருப்பத்தில் மேம்படுத்தி உள்ளனர். பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை காமராஜர் அறிமுகம் செய்தார். ஊட்டச்சத்து திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார். முட்டை வழங்கும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். வாரத்தில் அனைத்து நாட்களும் முட்டை வழங்கும் திட்டத்தை ஜெயயலிதா அமல்படுத்தினார். அதன்படி அரசு பள்ளிகளில் வாரத்தில் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்க நான் விரும்புகிறேன். இதுதொடர்பாக முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளேன். இது பல துறைகள் சம்மந்தப்பட்டது. முதல்வர் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருக்கிறார்'' என்றார். இதன்மூலம் முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்கும்பட்சத்தில் தமிழக அரசு பள்ளிகளிகளில் வாரத்தில் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்கப்படும்.இந்நிலையில் தான் தற்போது முதல்வர் விஜய்யின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அதாவது தற்போது அரசு பள்ளிகளில் மதிய உணவுக்கு ஒருவரும், காலை உணவுக்கு ஒருவரும் சமைக்கப்படுகின்றனர். இதில் மதிய உணவு திட்டம்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பிரியாணி வழங்குவது தொடர்பான எந்த முடிவும் அந்த துறையை சார்ந்தே எடுக்கும். மேலும் முதல்வர் விஜய்யும் தனது ஆட்சியில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளார். இதனால் விரைவில் தமிழக அரசு பள்ளிகளில் வாரம் ஒருநாள் பிரியாணி வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பிரியாணி மட்டுமின்றி இன்னும் சில கோரிக்கைகள் தொடர்ந்து உள்ளன. அதாவது கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி தமிழ்நாட்டில் 1 முதல் 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 32 லட்சம் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். மதிய உணவு திட்டத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் என்று மொத்தம் 40 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் தான் மதிய உணவு திட்டத்தை 10ம் வகுப்பில் இருந்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலம் வைத்து வருகின்றனர். இதன்மூலம் கூடுதலாக 8 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தில் பலன் பெறுவார்கள் என்று கூறியுள்ளனர். இதுபற்றியும் முதல்வர் விஜய் பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி முந்தைய திமுக ஆட்சியில் காலை .ணவுககாக மாணவர் ஒருவருக்கு ரூ.15 ஒதுக்கப்படுகுிறது. இதில் ரவை உப்புமா, கோதுமை உப்புமா வழங்கப்படும் நிலையில் அதன் மெனுவையும் மாற்றியமைக்கும் வகையில் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி காலை உணவு பணியையும், மதிய உணவு சமைக்கும் ஊழியரிடம் வழங்கி அவர்களின் பணி முறைப்படுத்துவது பற்றியும் அரசு ஆலோசித்து வருகிறது.