தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!

  • சென்னை: தமிழக அரசியலில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், தற்போது தனது கட்சி அலுவலகப் பணிகளில் படு பிஸியாக ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் எளிமையின் அடையாளமாக, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியது போன்ற ஒரு சாதாரண மர நாற்காலியையே விஜய் பயன்படுத்தி வந்தார். ஆனால், இப்போது அந்தப் பழைய நாற்காலிக்கு 'குட்பை' சொல்லிவிட்டு, ஒரு பிரம்மாண்டமான சொகுசு நாற்காலிக்கு மாறியிருக்கிறார் விஜய்.

    Advertisement

    கட்சிப் பணிகளைத் தொடங்கியதில் இருந்து சுமார் 28 நாட்களாக அந்தச் சாதாரண மர நாற்காலியில்தான் விஜய் அமர்ந்து ஆலோசனைகளை நடத்தி வந்தார். "தலைவர் எவ்வளவு எளிமையாக இருக்கிறார்!" என்று தொண்டர்கள் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்த வேளையில், தற்போது அந்த நாற்காலி மாற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    ஏன் இந்த மாற்றம்?

    விஜய் இந்த மாற்றத்தைச் செய்ததற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அலுவலகப் பணிகளுக்காகத் தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டியிருப்பதால், அந்தப் பழைய மர நாற்காலி விஜய்க்கு லேசான முதுகு வலியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    லட்சம் ரூபாய் 'பிரீமியம்' சேர்:

    விஜய்க்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய நாற்காலி, அதிநவீன வசதிகளைக் கொண்டது. இதில் உயர்தர 'பிரீமியம்' குஷன்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீண்ட நேரம் அமர்ந்திருந்தாலும் முதுகுத் தண்டுவடத்திற்கு எந்தவித அழுத்தமும் தராத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த ஒரு நாற்காலியின் விலை மட்டும் சுமார் 80 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    கவனம் ஈர்க்கும் 'லுக்': பார்ப்பதற்கே மிகவும் கம்பீரமாகவும், சொகுசாகவும் இருக்கும் இந்த நாற்காலி, தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. "தளபதிக்கு ஏற்ற சிம்மாசனம் இதுதான்" என அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    எளிமையில் இருந்து சொகுசுக்கு மாறியிருந்தாலும், விஜய்யின் அரசியல் வேகம் குறையாமல் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜய் தினமும் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வருகிறார். மாலை 5 மணிக்கு நீலாங்கரைக்கு புறப்படுகிறார். மதிய உணவு இடைவேளைக்குக் கூட அவர் வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தே உணவு கொண்டு வருகிறார். இதை பாராட்டி வரும் நிலையில் தற்போது நாற்காலி மாற்றம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    Advertisement

    கடந்த மாதம் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவும் தனது அறையில் சொகுசு நாற்காலியை மாற்றியுள்ளார். இது சர்ச்சையை கிளப்பியது.

    இந்த நாற்காலியின் விலை ரூ 80 ஆயிரம் இருக்கும் என்கிறார்கள். இது ரெட் ஓக் இம்பீரியோ வகையை சேர்ந்த ஒரு பிரீமியம் நாற்காலியாகும். இந்த நிலையில் தற்போது விஜய்யும் நாற்காலியை மாற்றியுள்ளார்.

    முதலில் எதற்கு நாற்காலியில் வெள்ளைத் துண்டு என்ற கேள்வி எழுந்த நிலையில் அதை நீக்கிவிட்டு மீண்டும் துண்டை பயன்படுத்தியிருந்தார். விஜய் பெரும்பாலும் விலை உயர்ந்த பொருட்களையே பயன்படுத்தி வருகிறார். அவரது பிஎம்டபிள்யூ கார் ரூ 3 கோடி இருக்கும் என்கிறார்கள். ஒரே நிற உடை என்றால் தினமும் புதிய கோட் சூட்களை அணிகிறார். அதற்கும் லட்சக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விஜய் ஆடம்பர முதல்வர் என்ற எண்ணம் மக்கள் மனதில் எழத் தொடங்கியதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

    English Summary

    Actor-turned-politician Vijay, who initially used a simple wooden chair at his party office as a symbol of simplicity, has now reportedly upgraded to a luxurious new chair. The change has sparked discussions among party workers and political observers as Vijay remains actively involved in strengthening the organizational structure of the Tamilaga Vettri Kazhagam.