அப்போவே ஜோதிடர் சொன்னாரு.. விஜய் செய்ததை நாமும் செய்திருக்கலாம் போல.. மகனிடம் புலம்பிய எடப்பாடி!

  • சென்னை: முதல்வர் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுனிடம் புலம்ப தொடங்கி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும் கூட, அவரின் ஆஸ்தான ஜோதிடர் அலுவலகத்தை மாற்ற அறிவுறுத்தினாராம். ஆனால் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. ஒருவேளை மாற்றி இருந்தால் அதிகாரம் நிலைத்திருக்குமோ என்று புலம்ப வருகிறார்.

    Advertisement

    முதல்வர் விஜய்யின் ஜோதிட செண்டிமெண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முதலில் ஆஸ்தான ஜோதிடர் சொன்னதால் கோயில் கோயிலாக ஏறி இறங்கிய விஜய், தற்போது ஜோதிடர் சொன்னதால் தனது உடைகளிலும் சில மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக வெள்ளிக் கிழமையானால் தலைமைச் செயலகத்திற்கு பட்டு வேஷ்டி சட்டசையுடன் விஜய் வருவது வாடிக்கையாகிவிட்டது.

    Advertisement

    அதேபோல் ஆஸ்தான ஜோதிடர் சொன்னதன் பேரில் தனது அறை மற்றும் அலுவலகம் உள்ளிட்ட அனைத்தையும் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாறுகிறார் முதல்வர் விஜய். அவரது ராசியின் படி தற்போதைய அலுவலகம் வாஸ்து படி அமையாததால்தான் இந்த மாற்றம்.

    முதல்வரைத் தொடர்ந்து அவரது அமைச்சர்களைப் பிடித்து ஆட்டும் இந்த வாஸ்து விவகாரம், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் அதே மனநிலையை உருவாக்கி வருகிறது. அண்மையில் தனது மகன் மிதுன் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் விஜய்யின் அலுவலகம் மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, நன் முதல்வராக இருந்த சமயத்தில் நம்முடைய ஜோதிடர் கூட , எனது ராசி - லக்னம் படி நான் அமர்ந்துள்ள அறை வாஸ்து படி இல்லை.

    Advertisement

    அதனால் சற்று மாற்றி அமைக்கலாம். இல்லையெனில் புதிய இடத்துக்கு மாற்றம் செய்யலாம். அப்படி செய்தால் அதிகாரம் நிலைத்து நிற்கும் என சொன்னாரு. ஜோதிடத்தின் மீது நமக்கு நம்பிக்கை இருந்தாலும், அதனை ஏற்க மறுத்துட்டேன். அரசியல் ரீதியாக விமர்சனங்கள் வரும்.. காலம் காலமாக முதலமைச்சரின் அறை இதுதான் என இருக்கிறபோது அதனை மாற்றுவதில் தேவையற்ற சர்ச்சை வரும் என நினைத்தே ஜோதிடர் சொன்னதை ஏற்கவில்லை.

    இப்போ அதை நினைக்க வேண்டியதிருக்கு. ஒருவேளை வாஸ்துபடி மாற்றியமைக்கப்பட்டிருந்தால் ஆட்சியை தக்க வைத்திருக்கலாமோ?'' என்று அங்கலாய்த்துப் பேசியிருக்கிறார். எடப்பாடியின் இந்த ஆதங்கம், மெல்ல மெல்ல கசிந்து அதிமுகவில் மேல்மட்ட தலைவர்களிடம் பரவி வருகிறது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமியும் வீட்டை மாற்றியது இதனால் தானோ என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    CM Vijay Moves Office to Namakkal Kavignar Maaligai, Edappadi Palaniswami Reportedly Regrets Past Decision