பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு.. 543 எம்பி தான் இருக்கனும்! சட்டசபை கூடியதும் சிஎம் விஜய் அதிரடி மூவ்

  • சென்னை: மத்திய அரசு தொகுதி மறு வரை மசோதாவை கொண்டுவர திட்டமிட்டு இருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்று அளவிலேயே நிரந்தரமாக வேண்டும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை காலதாமதம் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

    Advertisement

    தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வு ஒழிப்பு தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியதும் முதலமைச்சர் விஜய் அரசினர் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.

    Advertisement

    அந்த தீர்மானத்தில்," தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை / சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஏப்ரல் 2026-இல் பாராளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.

    Advertisement

    இந்நிலையில் மீளவும் மேற்குறிப்பிட்ட அரசியலமைப்புச் சட்ட எனத் தெரிந்ததன் திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது அடிப்படையில் 1971-க்கு பிறகு உள்ள எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

    ஒன்றிய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்த ஒரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒன்றிய அரசின் தலையாய கடமையாகும்.

    Advertisement

    எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதேவேளையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது.

    1. நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.

    Advertisement

    ii. தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.

    III. வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என கூறினார். தொடர்ந்து தீர்மானத்தின் மீது சட்டசபை உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

    English Summary

    Tamil Nadu CM Vijay proposes resolution to retain 543 Lok Sabha seats and implement 33% women’s reservation without delay.