சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு

  • சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படி சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிட திட்ட அனுமதியை எளிமையான முறையில் விரைவில் பெறுவதற்காகவும், ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறையினால் ஏற்படும் கால தாமத்தை தவிர்ப்பதற்காகவும், இனிவரும் காலங்களில் அபிவிருத்திதாரருக்கு ஏற்படும் கால தாமதம் குறைப்பதற்காகவும், குறைந்த நேரத்தில் ஒப்புதல்களை வழங்கவும், கட்டிட விதிமுறைகள் மற்றும் கட்டிட விதிகளுக்கு உட்பட்டு, பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமே வழங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது

    Advertisement

    தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகையில், " தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிட திட்ட அனுமதியை எளிமையான முறையில் விரைவில் பெறுவதற்காக பல அடுக்குமாடி (High Rise Buildings) திட்ட அனுமதி (Planning Permission) வழங்கும் அதிகாரத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு (CMDA) வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    சிஎம்டிஏவுக்கு விண்ணப்பம்

    இதுநாள் வரை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியானது, அபிவிருத்தி செய்பவர்களால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு, அவ்விண்ணப்பத்தை கள ஆய்வு மற்றும் கூர்ந்தாய்வு செய்து பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டு பல அடுக்குமாடி கட்டிட குழுவால் பரிசீலனை செய்து அக்குழுவின் பரிந்துரையின்படி அரசுக்கு சமர்ப்பித்து அரசாணை பெற்ற பின் பலஅடுக்குமாடி திட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    கட்டிட அனுமதி

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படி சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிட திட்ட அனுமதியை எளிமையான முறையில் விரைவில் பெறுவதற்காகவும், ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறையினால் ஏற்படும் கால தாமத்தை தவிர்ப்பதற்காகவும், இனிவரும் காலங்களில் அபிவிருத்திதாரருக்கு ஏற்படும் கால தாமதம் குறைப்பதற்காகவும், குறைந்த நேரத்தில் ஒப்புதல்களை வழங்கவும், கட்டிட விதிமுறைகள் மற்றும் கட்டிட விதிகளுக்கு உட்பட்டு, பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமே வழங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அரசாணையின்படி முந்தைய நடைமுறை என்ன

    கட்டிட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) கள ஆய்வு செய்யும். பின்னர் அது 'பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின்' பரிசீலனைக்கு அனுப்பப்படும். அக்குழுவின் பரிந்துரைக்கு விடை கிடைத்ததும், அந்தக் கோப்பு அரசுக்கு ( வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு) அனுப்பப்படும். அங்கு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சகத்தின் ஒப்புதலோடு அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகே இறுதி அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    அதிகாரம் யாருக்கு

    முதலமைச்சர் விஜய் அவர்களின் இந்த புதிய உத்தரவின்படி, இனி கோப்புகளை அரசுக்கு அனுப்பி அரசாணைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கட்டிடக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமே நேரடியாகவும் முழுமையாகவும் முடிவெடுத்து திட்ட அனுமதியை வழங்கிக் கொள்ளலாம் என அதிகாரம் மாற்றப்பட்டுள்ளது.

    Advertisement


    கட்டிட உரிமையாளர்களுக்கு ஏற்படும் நன்மைகள்

    புதிய நடைமுறையின் மூலம் மிகக் குறைந்த நேரத்திலேயே திட்ட அனுமதி மற்றும் ஒப்புதல்கள் வழங்கப்படும். இதற்கு முன்பு விண்ணப்பங்களைச் சரிபார்த்து அனுமதி வழங்குவதில் ஏற்பட்டு வந்த நீண்ட கால தாமதம் இனிமேல் பெருமளவு குறைக்கப்படும். பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை எளிய முறையில் உடனுக்குடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    English Summary

    CM Vijay orders CMDA to directly approve high-rise buildings, ensuring faster clearances, simpler processes, and eliminating delays for builders.