GEM வீரமணியை விட்றாதீங்க..யாரா இருந்தாலும் அரெஸ்ட் பண்ணுங்க! காவல்துறைக்கு ஆர்டர் போட்ட சிஎம் விஜய்!

  • சென்னை: Gem கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான் சிறுமிகள் பாலியன் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது, விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணையை நடத்திய நிலையில் மீண்டும் அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல்கள் உலாவுகின்றனர்.

    ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தங்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தினார் என்று மேலும் 9 சிறுமிகள் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் அந்த பழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் விடக்கூடாது, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் எனவும் உத்தரவு.

    பெண் உதவி ஆய்வாளர்கள் உள்ளடக்கிய தனிப்படை வீடியோவில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக காவல்துறை யாருடைய தலையீடும் இன்றி விசாரிக்கலாம் என போலீசாருக்கு முதல்வர் விஜய் சிக்னல் கொடுத்துள்ளாராம். இதனால் பலர் சிக்கலாம் என சொல்லப்படுகிறது.

    தமிழக அளவில் பிரபலமான கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணியை சுற்றி தற்போது சர்ச்சை வெடித்து இருக்கிறது. சிறுமிகளை பாலியல் ரீதியாக அவர் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டை எழுந்தது.

    திமுக ஆட்சியிலேயே இந்த புகார் எழுந்த நிலையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கிடையே கடந்த அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாலியல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டரிடம் சென்னையயைச் சேர்ந்த ஒருவர் ரகசிய புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் அடையாளம் தெரியாத நபர் தனக்கு அளித்த பென்டிரைவில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும், சுமார் 80 வயது மதிக்கத்தக்க நபர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையில் கொடுத்ததாக காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டது.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் வீடியோவில் இருந்தவர் ஜெம் குழுமத்தின் தலைவரான வீரமணி என்பது தெரிய வந்தது. தேனாம்பேட்டை வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தனது கூட்டாளியான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனை அந்த வீட்டில் குடி வைத்துள்ளார்.

    மேலும் அவர்கள் மூலம் ஏழை சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதுமட்டுமல்லாமல் மேலும் பல தொழிலதிபர்களுக்கும் சில முக்கிய பிரமுகர்களுக்கும் அந்த சிறுமிகளை அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி, சாந்தி, மகேந்திரா சிம்கன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு புகைப்படங்களும் வீடியோக்களும் கைப்பற்றப்பட்டன.

    மேலும் போகிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த மாதம் 8ஆம் தேதி தான் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டார். இந்த வன்கொடுமை சம்பவத்தில் மேலும் பல தொழிலதிபர்களுக்கு தொடர்பிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் இந்த விவகாரம் தமிழக அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

    அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்பே வீரமணி மீது புகார் வந்த நிலையில் அதை அப்போதைய திமுக அரசு முடி மறைத்து விட்டதாக தமிழக வெற்றி கழகத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தான் வீரமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்திலும் தொழில்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Tamil Nadu CM Vijay reportedly directs police to intensify the Gem Granite child abuse investigation and pursue all suspects without interference.