விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்!

  • சென்னையை சர்வதேச நகரங்களுக்கு இணையாக மாற்றும் நோக்கத்துடன், சென்னை மாநகரத்தின் மூன்றாவது மாஸ்டர் பிளான் திட்டத்தை சர்வதேச தரத்தில் தயாரிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    இந்தத் திட்டம் 2027 முதல் 2046 வரையிலான 20 ஆண்டுகால வளர்ச்சி வரைபடமாக அமையவுள்ளது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை, தற்போதைய அரசு சர்வதேச தரத்துக்கு உயர்த்தி செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

    Advertisement

    சென்னைக்கான 3வது மாஸ்டர் பிளான்

    சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன் 1976ஆம் ஆண்டில் முதல் மாஸ்டர் பிளனும், 2006 முதல் 2026 வரை இரண்டாவது மாஸ்டர் பிளனும் அமலில் இருந்தன. இப்போது 2027 முதல் 2046 வரையிலான அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டத்தை சர்வதேச தரத்தில் உருவாக்க முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இந்தத் திட்டம், சென்னை பெருநகரப் பகுதியின் 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செங்குத்து வளர்ச்சி, கலவை பயன்பாட்டு மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்பை மையப்படுத்தி தயாரிக்கப்படவுள்ளது.

    Advertisement

    செங்குத்து வளர்ச்சி

    முந்தைய திட்டங்களில் கிடைமட்ட விரிவாக்கத்துக்கு அதாவது horizontal வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், மூன்றாவது மாஸ்டர் பிளானில் செங்குத்து வளர்ச்சியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மெட்ரோ வழித்தடங்கள், வணிக மையங்கள் மற்றும் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி பகுதிகளில் தரை தள விகிதத்தை (FSI) உயர்த்தி, உயரமான கட்டிடங்களை அனுமதிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்படுகிறது.

    இதன் மூலம், நகரின் மையப் பகுதிகளில் அதிகப்படியான மக்கள் நெருக்கடியை குறைக்கவும், மக்கள் தொகையை இடம்பெயராமல் தக்கவைத்து, நில வளத்தை திறன் பட பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கலவை பயன்பாட்டு மேம்பாடு

    வீடு, வேலை, கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கலவை பயன்பாட்டு மேம்பாட்டை (Mixed-Use Development) இந்தத் திட்டமும் இந்த 3வது மாஸ்டர் பிளான் திட்டத்தில் ஊக்குவிக்கிறது. இதனால், மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் குறையும். நடைப்பயணம் செய்யக்கூடிய சமூகங்களை உருவாக்குவதும் இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

    Advertisement

    ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில், இத்தகைய திட்டம் தான் பெரிய அளவில் முக்கியதுவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இனி வரும் காலக்கட்டத்தில் சென்னையில் உருவாகும் ரியல் எஸ்டேட் திட்டங்கள் பெரியதாகவும், அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீல-பச்சை உள்கட்டமைப்பு

    வெள்ள அபாயத்தை குறைக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், ஆறுகள், ஈரநிலங்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை நகர்ப்புற திட்டமிடலில் இணைக்கும் "நீல-பச்சை உள்கட்டமைப்பு" (Blue-Green Infrastructure) இந்தத் திட்டத்தில் முக்கிய இடம் பெறவுள்ளது. இது சென்னையின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த உதவும்.

    Advertisement

    அனைவருக்கும் வீட்டு வசதி

    குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, அவர்களை இடம்பெயரச் செய்யாமல் அங்கேயே மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் "இன்சிட்டு மறுவளர்ச்சி" (In-situ Redevelopment) முறையை இந்த 3வது மாஸ்டர் பிளான் திட்டத்தில் ஊக்குவிக்கிறது. இதனால், ஏற்கனவே உள்ள சமூக உறவுகள் பாதுகாக்கப்படும்.

    மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிப்புப் பணி விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பிறகு இறுதி வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்காக CMDA பல முன்னணி கல்லூரிகள் உடன் ஆலோசனை செய்து திட்டமிடவும், ஏற்கனவே போடப்பட்டுள்ள திட்டத்தை மறுஆய்வு செய்து மேம்பட்ட நகரமாக சென்னையை உருவாக்கவும், மாஸ்டர் பிளான் உருவாக்கும் பணிகளை வேகமாக முடிக்கவும் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    Advertisement

    இந்தத் திட்டம், சென்னையை அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு ஒரு நவீன, நிலையான மற்றும் உள்ளடக்கிய நகரமாக மாற்றுவதற்கான முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Chief Minister Vijay has directed officials to prepare Chennai’s Third Master Plan (2027-2046) to international standards, focusing on vertical growth, mixed-use development, and climate-resilient infrastructure. The 20-year roadmap aims to transform Chennai into a modern, sustainable, and globally competitive city.