அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன?

  • சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையில் ஒரே நேரத்தில் நடந்த அதிகாரி மாற்றம் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அனைத்து துறையிலும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க துவங்கியிருக்கும் வேளையில் தற்போதைய இடமாற்றம் பெரிய செய்தியாக மாறியுள்ளது.

    Advertisement

    இந்த நடவடிக்கை சாதாரண இடமாற்றம் மட்டுமல்ல, நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் உள்ளூர் அரசியல் அமைப்புகளுக்கும் இடையே உருவான நெருக்கமான தொடர்பையும், அதன் மூலம் ஏற்படும் மோசடிகளையும் உடைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    70 பொறியாளர்கள், 40 நிர்வாக அதிகாரிகள் மாற்றம்

    சென்னை மாநகராட்சியில் (GCC) மட்டும் சுமார் 70 பொறியாளர்களை மாற்றியுள்ளது. இதில் பெரும்பாலானோர் உதவி பொறியாளர்கள் (AE), உதவி செயற்பொறியாளர்கள் (AEE) ஆகிய நிலைகளில் பணியாற்றியவர்கள். அதோடு செயற் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களும் இடமாற்றப் பட்டியலில் உள்ளனர்.

    மற்றொரு புறம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறை மாநிலம் முழுவதும் சுமார் 40 அதிகாரிகளை இடம் மாற்றியுள்ளது. இதில் நகர திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த 13 நகர திட்டமிடல் அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

    Advertisement

    ஒரே இடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள்

    அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, மாற்றப்பட்ட சிலர் ஒரே நகராட்சி அல்லது மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளனர். சிலர் மூன்று தசாப்தங்களாக அதே அமைப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நிர்வாக வட்டாரங்களில் இதை "சிஸ்டத்தை ரீசெட் செய்யும் நடவடிக்கை" என பார்க்கப்படுகிறது.

    ஒரே மண்டலத்தில் நீண்டகாலம் பணியாற்றும் அதிகாரிகள், உள்ளூர் கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் நிர்வாகத்துடன் மிக நெருங்கிய தொடர்பு வளர்த்துக்கொள்ளும் சூழல் உருவாகும். அதன் விளைவாக தேவையற்ற கூடுதல் மதிப்பீடுகள், குறைந்த மதிப்புள்ள திட்டங்கள், முறைகேடுகள் போன்றவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

    Advertisement

    பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், "பல ஆண்டுகள் ஒரே மண்டலத்தில் இருந்த சில அதிகாரிகள், உள்ளூர் அரசியல் பிரதிநிதிகளுடன் நெருக்கமான நட்பை உருவாக்கியிருந்தனர். தனித்தனியாகப் பார்க்கும்போது குறைந்த மதிப்புள்ள வேலைகளாக இருந்தாலும், அவை அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டால் கண்காணிப்பைத் தாண்டிச் செல்லும் அபாயம் உள்ளது. பின்னர் அவை முறைகேடு அல்லது அரசுக்கு நிதி இழப்புக்கு வழிவகுக்கலாம்" என்றார். இதனாலேயே தற்போது அதிகாரிகள் இடம்மாற்றப்பட்டு உள்ளனர்.

    இந்த இடமாற்றங்கள் அனைத்தும் சென்னை மாநகராட்சிக்குள் மட்டுமே நடக்கவில்லை. சில மூத்த அதிகாரிகள் மாவட்ட மாநகராட்சிகளுக்கிடையே மாற்றப்பட்டுள்ளனர். இது நிர்வாகக் கட்டமைப்பில் பரவலான மறுசீரமைப்பு நடைபெறுவதை சுட்டிக்காட்டுகிறது.

    Advertisement

    முதல்வரின் ஆக்ஷன்

    சமீபத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அதிகாரிகளின் நம்பகத்தன்மை அல்லது பணி திறன் குறித்து சந்தேகம் எழுந்தால் அமைச்சர்கள் அல்லது முதல்வர் அலுவலகத்தின் தனிப்பட்ட அனுமதிக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுக்கலாம் என்று செயலர்கள் மற்றும் ஆணையர்களிடம் கூறப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில்தான் இந்த பெரிய அளவிலான மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாக வட்டாரங்கள் கருதுகின்றன.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay has initiated a large-scale transfer of around 70 engineers in Greater Chennai Corporation and 40 officials in the Municipal Administration department. The move is viewed as an effort to break long-standing nexus between officials and local politicians while resetting the administrative system to reduce irregularities.