சென்னை: வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவுக்காக விஜய் டெல்லி செல்வது தவிர்க்கப்பட்டாலும், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மானிய கோரிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டால் அந்த இடைவெளியில் டெல்லிக்கு ஒருமுறை சென்று வருவதற்கு விஜய் ஆலோசித்துள்ளார். தமிழ்நாடு இல்லத்தில் முக்கிய ஆலோசனை ஒன்று நடத்துவதற்காகவே இந்த பயணத்தை மேற் கொள்ளலாம் என அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
அதாவது, தனது நண்பரும் ஜனநாயகன் படத் தயாரிப்பாளருமான தொழிலதிபர் வெங்கட்நாராயானா என்பவரை தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக அண்மையில் நியமித்தார் விஜய். இந்த பதவி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி. இதில் நியமிக்கப்படுபவர், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும். கேபினெட் அந்தஸ்து கொண்ட பதவி இது. பொறுப்புடைமையும் தமிழகத்தின் மீதான அக்கறையும் இந்த பதவியில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும்.
மதிமுக தலைவர் வைகோவின் நாடாளுமன்ற உரைகளை தொகுத்து நூல் வடிவில் வெளியிடப்படும் விழா, ஆகஸ்ட் 4-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, இந்த புத்தகத்தை வெளியிட முதல்வர் விஜய் பெற்றுக்கொள்கிறார் என்பதாகத்தான் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். குறிப்பாக, வைகோவுக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள், சீனியர் வழக்கறிஞர்கள், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர்கள், எம்.பி.க்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களையெல்லாம் வைகோவே தொலை பேசியில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். பலரும் விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் தந்துள்ளனர். அந்த வகையில், ஆகஸ்ட் 4-ந்தேதி டெல்லியில் நடக்கும் இந்த விழா, தேசிய அளவில் விஜய்யை முன்னிறுத்தும் நிகழ்வாகவும் அமையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், விஜய்யை இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என அவரிடம் தெரிவித்துவிட்டதாக வைகோ சொல்லியிருக்கிறார். நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டால், கட்டுப்படுத்த முடியாத பெரும் கூட்டம் திரளும். அதனால் விழாவை நீங்கள் தவிருக்குமாறும், நூலின் தமிழ் வெளியிட்டை சென்னையில் நடத்துகிற நிகழ்வில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என விஜய்யிடம் அவர் தெரிவித்ததாகவும் வைகோ சொல்லியிருக்கிறார். இதனால் விஜய் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்கிறார்கள். வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவுக்காக விஜய் டெல்லி செல்வது தவிர்க்கப்பட்டாலும், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மானிய கோரிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டால் அந்த இடைவெளியில் டெல்லிக்கு ஒருமுறை சென்று வருவதற்கு விஜய் ஆலோசித்துள்ளார். அதனால், மத்திய அரசு பணியில் இருக்கும் தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு வெங்கட்நாராயணாவை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்தும் கடந்த வாரம் விவாதித்திருக்கிறார் விஜய். மத்திய அரசில் உள்ள தமிழக கேடர் அதிகாரிகள், மத்திய அரசின் அதிகா ரிகளோடு மிகவும் நெருக்கமான நட்பை வளர்த்துகொண்டிருப்பார்கள். அந்த நட்பு என்பது தமிழகத்தின் நிதித் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதற்காக வும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் இருக்க வேண்டும் என்பது அவசியம். அதனால் அந்த அதிகாரிகளோடு, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதிக்கு நல்ல நெருக்கமும் தொடர்பும் இருந்தால் தான் மத்திய அரசிடம் விஜய் எதிர்பார்க் கும் விசயங்களுக்கு உறுதுணையாக இருக்கும். அந்த நெருக்கம் உருவாக வேண்டுமானால், அதிகாரிகளுக்கு டெல்லி பிரதிநிதியை முதல்வர் விஜய் அறிமுகப்படுத்துவதோடு, சில புரிதல்களையும் நேரடியாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள் ஒத்துழைப் பார்கள். இதற்காகத்தான் அதிகாரிகளிடம் டெல்லி பிரதிநிதியை அறிமுகப் படுத்த ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்துவது அவசியம். அந்த வகையில் விரைவில் டெல்லி செல்லவிருக்கிறார் முதல்வர் விஜய் என்கிறது கோட்டை வட்டாரம். - சிறப்பு நிருபர் எழில்விஜய் வேண்டாம்
டெல்லிக்கு செல்லும் விஜய்