அம்பை தொகுதியில் கேக் கொடுத்து.. குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விஜய்! இடைத்தேர்தல் கணக்கு போட்ட தவெக

  • சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் கொடுத்து முதல்வர் விஜய் குழந்தைகள் தின விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. ஏற்கனவே நவம்பர் 2ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், நவம்பர் 3ல் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு விஜய் பயணிக்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலமாக இடைத்தேர்தல் நடக்கும் மாவட்டங்களுக்கு விஜய் பயணிக்க முடிவு எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

    Advertisement

    நவம்பர் 14ல் குழந்தைகள் தின விழாவை கொண்டாடுவதற்கு தமிழக அரசு தரப்பில் 62.46 லட்சம் கேக்குகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டு 4 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.7.54 கோடி மதிப்பிலான டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    விஜய்யின் இமேஜை குழந்தைகள் மத்தியில் தக்க வைப்பதற்காகவே இந்த கேக் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை மாணவர்களுக்கு கேக் கொடுத்து கொண்டாடுவதற்காக முதல்வர் விஜய் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    அம்பாசமுத்திரம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதன் காரணமாகவே குழந்தைகள் தின விழாவை அம்பாசமுத்திரம் தொகுதியில் கொண்டாட விஜய் பயணிக்கிறார் என்று பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடக்க உள்ள அத்தனை தொகுதிகளுக்கும் விஜய் இப்படி பயணிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    ஏற்கனவே நம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விஜய் பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்க வரும் முதல்வர் விஜய், நலத்திட்ட உதவிகளையும் செய்ய இருக்கிறார். அப்போது விராலிமலை தொகுதிக்கும் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    அதேபோல் நவம்பர் 3ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கு விஜய் வர இருப்பதாக தகவல் வெளியாகியது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் விழாவில் பங்கேற்க விஜய் வர இருக்கிறார். இதன் மூலமாக இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் விஜய் தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    CM Vijay Plans Childrens Day Celebration in Ambai Constituency with Cake Distribution at Govt Schools