வித்யா டூ வா.சுந்தர் வரை.. ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றோருக்கு பரிசுத்தொகை வழங்கிய முதல்வர்

  • சென்னை: ஆசிய போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் விஜய் இன்று பரிசுத்தொகை வழங்கியதோடு, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்து வழங்கினார்.

    Advertisement

    ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்தது. இந்த போட்டிகளில் பல்வேறு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கணைகள் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டனர். பலரும் பதக்கங்களை குவித்தனர்.

    Advertisement

    குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தடகளத்தில் வித்யா ராம்ராஜ், தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று 3 பதக்கங்களை குவித்தார். கிரிக்கெட்டில் கமலினி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். கம்பு ஊன்றி தாண்டுதல் பிரிவில் தங்கம் பரணிகா இளங்கோவன் வெண்கலம், தடகளத்தில் அபிநயா ராஜராஜன் வெண்கலம், தடகள தொடர் ஓட்டல் விஷால் வெள்ளி, வெண்கலம் என பலரும் 19 பதக்கங்களை குவித்தனர்.

    இதன்மூலம் சர்வதேச அரங்கில் தமிழக வீரர், வீராங்கணைகள் முத்திரை பதித்தர். இவர்களுக்கு முதல்வர் விஜய் சார்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது போட்டிகள் முடிவடைந்து அனைவரும் தமிழகம் திரும்பிய நிலையில் இன்று சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் முதல்வர் விஜய் சார்பில் பாராட்டுடன் பரிசுத்தொகை மற்றும் விருந்து வழங்கப்பட்டது.

    Advertisement

    இந்த நிகழ்வில் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் விஜய் பரிசுத்தொகைகளை வழங்கினார்.

    English Summary

    Chief Minister Vijay today presented cash awards to those who excelled and won medals at the Asian Games and the Chess Olympiad, and hosted a banquet for all the participants.