சென்னை: 2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தவெக தலைவர் விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் விவகாரம், நாளுக்கு நாள் தமிழக ஆளுங்கூட்டணிக்குள் மிகப்பெரிய அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. கட்சியின் பெயரை 'தேசிய வெற்றி கழகம்' என மாற்றி, 100 மக்களவைத் தொகுதிகளைக் குறிவைத்து களம் இறங்க தவெக வியூகம் அமைத்து வருகிறது.
ஆனால், இந்த அதிரடி நகர்வு தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் மேலிடத்தை உச்சக்கட்ட அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தேசிய அளவில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாமல், விஜய்யை தனி மாற்றுத் தலைவராகக் காட்ட தவெக முயற்சித்தால், தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசுக்கு அளித்து வரும் ஆதரவை பாதியிலேயே திரும்பப் பெற டெல்லி காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. வட மாநிலங்களில் '#VijayThalapathy' என்ற பெயரில் இந்தியில் பரப்பப்படும் ரீல்ஸ்கள், 'தேசிய வெற்றி கழகம்' என்ற பெயரில் உ.பி., பிகார் மற்றும் தென் மாநிலங்களில் புதிய கிளைகளைத் தொடங்கும் திட்டங்கள், மற்றும் 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் 3-வது இடத்தைப் பிடித்தது ஆகியவை டெல்லி காங்கிரஸ் மேலிடத்தை நிலைகுலைய வைத்துள்ளது. இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர, ராகுல் காந்தியின் நேரடித் தூதர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரும், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியும் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் விஜய்யை நேரில் சந்தித்தனர். ஆனால், அந்தச் சந்திப்பில் நடந்த சம்பவங்கள் இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூருடன் இணைந்து தலைமைச் செயலகத்திற்கு வந்ததுமே, டெல்லி மேலிடத்தின் மிக முக்கியமான செய்தியோடுதான் அவர்கள் வந்துள்ளார்கள் என்பது உறுதியானது. சந்திப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, அவர்கள் மிகுந்த ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சந்திப்பின்போது ராகுல் காந்தியின் கருத்துகளாகப் பல விவகாரங்களை அவர்கள் விஜய்யிடம் நேரடியாக அடுக்கியுள்ளனர்: திமுகவை உதிர்த்துவிட்டு உங்களுடன் நாங்கள் கூட்டணி அமைத்தோம். தமிழகத்தில் நீங்கள் ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு கொடுத்ததால், எங்கள் மீது திமுக உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறது. 'இந்தியா' கூட்டணியை விட்டே திமுக முழுமையாக விலகிவிட்டது. நாங்கள் எவ்வளவோ சமரச முயற்சிகளை எடுத்தும் திமுக தொடர்ந்து எங்களுக்கு எதிராகவே நிற்கிறது. இன்னொரு பக்கம், திமுகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும் தீவிரமாக வலைவீசி வருகிறது. திமுகவரோ எதிர்த்த காரணத்தால் எங்களுடன் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் என்று பல கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன. இத்தகைய இக்கட்டான சூழலில், ராகுல் காந்தியை ஓரங்கட்டிவிட்டு நீங்கள்தான் அடுத்த பிரதமர் என்று உங்கள் கட்சியினர் தொடர்ந்து பேசுவதை ராகுல் காந்தியால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தி மொழியில் திட்டமிட்டு நடத்தப்படும் இந்த இணையப் பிரச்சாரங்கள் டெல்லி தலைமையை மிகுந்த கவலையடையச் செய்துள்ளது. எனவே, உங்கள் கட்சியினருக்கு உடனடியாக வாய்ப்பூட்டுப் போட்டு இந்த பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள். ராகுல் காந்தியின் இந்த நேரடி எச்சரிக்கையையும், காங்கிரஸ் தலைவர்களின் குமுறல்களையும் முதலமைச்சர் விஜய் துளியும் ரசிக்கவில்லை... முக்கியமாக பேசும் போதே அவர்களை ஆப் செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பேசிய எதையும் காதுகொடுத்துக் கேட்கக்கூட அவருக்குத் துளி விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு.. விஜய் தலையாட்டி இருக்கிறார். அதன்பின் வீட்டில் எல்லோரும் நலமா... சாப்பிட்டீங்களா என்று மட்டும் கேட்டுள்ளார். வந்தவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அப்படியே அனுப்பிவிட்டார், ராகுல் காந்தியை ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம், ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றெல்லாம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஊடகங்களில் கொதித்தெழுந்த பிறகும், தவெக தலைமை அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்களின் குமுறல்களுக்கு எந்தவித விளக்கமும் அளிக்காமல், அலட்சியமான அணுகுமுறையையே தவெக வெளிப்படுத்தி வருகிறது. இதற்குப் பின்னால் தெளிவான அரசியல் எதார்த்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்த 22 கட்சிகளின் பலத்தையும், காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறித்தான் தனித்து 35% வாக்குகளைப் பெற்று விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். எனவே, காங்கிரஸின் தயவாலோ அல்லது ராகுல் காந்தியின் செல்வாக்காலோ தாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது. விஜய்யின் இந்த கள்ள மௌனமும், காங்கிரஸை எளிதாகக் கையாளும் போக்கும் டெல்லி மேலிடத்திற்கு ஒரு தெளிவான செய்தியை உணர்த்தியுள்ளது.. தமிழகத்தில் எங்களுடன் நீங்கள் இருக்கலாம்.. ஆனால் தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் நிபந்தனைகளுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். பழைய கூட்டணிக் கட்சியான திமுக, ராகுல் காந்தியை எந்தவித நிபந்தனையுமின்றி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதைப் போல, தவெக ஒருபோதும் காங்கிரஸின் பின்னால் கைகட்டி நிற்காது என்பதை விஜய் தனது அணுகுமுறை மூலம் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.பின்னணி என்ன?
தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன?
விஜய்யின் பதிலடி
காங்கிரஸின் புகார்களை 'டோன்ட் கேர்' செய்யும் அணுகுமுறை
டெல்லிக்கு அனுப்பப்படும் நேரடி சிக்னல்