சென்னை: தமிழ்நாடு அரசியலில் நடக்கும் திரைமறைவு ஆட்டங்கள் நாளுக்கு நாள் உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டி வருகின்றன. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் தொடர் நிர்பந்தங்களால் அதிருப்தி அடைந்துள்ள முதல்வர் ஜோசப் விஜய், அதிமுகவின் வேலுமணி - சி.வி. சண்முகம் அணியை உள்வாங்கி அரசுக்குத் தனிப் பெரும்பான்மையை உறுதி செய்ய முடிவெடுத்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் மிகுந்த பதற்றத்துடனும் அவசரத்துடனும் இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "நேரத்தைக் கடத்தாமல் உடனடியாக 28 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துப் பட்டியலை இறுதி செய்து களத்தில் இறங்குங்கள்" என்று வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோருக்கு விஜய் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இடைத்தேர்தல் முடிவுகள் தவெகவிற்கு சாதகமாக அமைந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கூட்டணிக் கட்சிகள் வைக்கும் தொடர் நிபந்தனைகள் முதல்வர் விஜய்க்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன. அதோடு தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான வெற்றி ஒன்றும் இல்லை. அதே சமயம், அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ.க்களைப் பிரிக்கும் விஷயம் தாமதமானால், அது எதிர்தரப்புக்கு சாதகமாகிவிடும் என்று விஜய் கருதுகிறார். எடப்பாடி பழனிசாமியின் எதிர் வியூகம்: எடப்பாடி பழனிசாமி அரசியல் களத்தில் பல புயல்களைக் கடந்து வந்தவர். தங்களுக்கு எதிராக 28 எம்.எல்.ஏ.க்களைத் திரட்டும் முயற்சி நடக்கிறது என்பதை அவர் முழுமையாக மோப்பம் பிடித்துவிட்டால், உடனே எம்.எல்.ஏ.க்களைத் தனி முகாம்களுக்கு மாற்றுவது அல்லது சமரசப் பேச்சுகள் மூலம் அவர்களைத் தனது பக்கமே தக்கவைப்பது போன்ற வேலைகளில் இறங்கிவிடுவார். தகவல் கசிந்துவிட்டால் வரும் சிக்கல்: அதிமுக எம்.எல்.ஏ.க்களின் மனநிலை மாறுவதற்குள், அல்லது இந்தத் திட்டம் முழுமையாக வெளியே கசிந்து ஊடகங்களில் வெடிப்பதற்குள், ஆளுநரைச் சந்தித்து ஆதரவுக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். *கூட்டணிக் கட்சிகளின் சந்தேகம்: தவெக தங்களை ஓரங்கட்டப் பார்க்கிறது என்பது காங்கிரஸ் மற்றும் விசிக தலைவர்களுக்குத் தெரியவந்தால், அவர்கள் சட்டசபையில் அரசுக்கு எதிராக நெருக்கடியை உருவாக்க முனையலாம். எனவே, அவர்களுக்கு யோசிக்கக் கூட அவகாசம் தராமல் ஒரே அடியில் காரியத்தை முடிக்க விஜய் திட்டமிடுகிறார். கடந்த 48 மணி நேரமாக தவெகவின் முக்கியப் பிரதிநிதிகள் வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோருடன் தொடர் தொலைபேசி மற்றும் நேரடி ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர். "நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று நாட்களைக் கடத்தினால், அங்கே எடப்பாடி சுதாரித்துக் கொள்வார். அது உங்களுக்கும் பின்னடைவு, எங்களுக்கும் சிக்கல். எனவே, ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் இறுதிப் பட்டியலை உடனடியாகத் தயார் செய்யுங்கள். சட்டரீதியான பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று தவெக தரப்பில் இருந்து மிகத் தீர்க்கமான தகவல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் வேலுமணியும் சண்முகமும் மின்னல் வேகத்தில் பேசி ஒப்புதல் பெற்று வருவதாகத் தெரிகிறது. இந்த அதிரடி நகர்வுகள் எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கும் எட்டத் தொடங்கியுள்ளதால், அவரும் தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கட்சிக்குத் துரோகம் செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து எடப்பாடி அணி பரிசீலித்து வருகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே 28 எம்.எல்.ஏ.க்களின் பலத்துடன் சட்டசபைத் தலைவர் மற்றும் ஆளுநரைச் சந்தித்துத் தனி அணியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் வேலுமணி - சி.வி. சண்முகம் - தங்கமணி கூட்டணி உறுதியாக உள்ளது. எடப்பாடி ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்குள் தங்களின் கணக்கை முடித்துவிட வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் அழுத்தமான உத்தரவாக இருக்கிறது. முதல்வர் விஜய்யின் இந்த அவசர ஆக்ஷன் பிளான் தமிழ்நாட்டு அரசியலில் மிகப் பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது மட்டும் உறுதி. எடப்பாடி பழனிசாமி சுதாரித்து எம்.எல்.ஏ.க்களைத் தன் வசம் தக்கவைப்பாரா? அல்லது விஜய் கொடுத்த அழுத்தத்தின் பேரில் வேலுமணி அணி 28 எம்.எல்.ஏ.க்களுடன் வந்து தவெகவிற்கு ஆதரவு தந்து எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா? இதற்கான விடை இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் தெரியவர வாய்ப்புள்ளது.விஜய்யின் அவசரத்திற்குக் காரணம் என்ன?
"தாமதம் வேண்டாம்... உடனே முடிவெடுங்கள்": தூதுவர்கள் மூலம் மெசேஜ்
எடப்பாடியை முந்துமா 'மூவர் கூட்டணி'?
அடுத்த சிலநாடுகள் மிக முக்கியம்