நாங்க சொல்றதுதான் நீங்கி கேட்கணும்.. உங்க தயவில் நாங்க இல்லை! ராகுலுக்கு ஆப்பு வைக்கும் விஜய்!

  • சென்னை: 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி தவெக தலைவர் விஜய் தேசிய அளவில் எடுத்து வரும் வியூகங்களும், 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் அவர் 9.2 சதவீத ஆதரவுடன் 3-வது இடத்தைப் பிடித்ததும் காங்கிரஸ் மேலிடத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் எதார்த்தத்தை காங்கிரஸ் கட்சி முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற குரல்கள் அரசியல் வட்டாரங்களில் வலுத்து வருகின்றன.

    Advertisement

    திமுக தலைமையிலான 22 கட்சிகள் கொண்ட பிரம்மாண்ட மெகா கூட்டணியை எதிர்த்து நின்று, முதல் தேர்தலிலேயே சுமார் 35 சதவீத வாக்குகளைத் தனித்து அறுவடை செய்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார் விஜய். இது சாதாரண அரசியல் சாதனை அல்ல என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணரத் தவறிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    22 கட்சிகள் பலம்... வீழ்த்திய விஜய்

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி என்பது சாதாரணமானதாக அமையவில்லை. காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மமக உள்ளிட்ட சிறுபான்மையினக் கட்சிகள் என 22 அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஆளுங்கட்சியின் முழு நிர்வாக பலத்துடனும், அதிகார பலத்துடனும் திமுக களம் கண்டது. ஆனால், அத்தனை கட்சிகளின் கூட்டு வலிமையையும் மீறி, தமிழக மக்கள் விஜய்யின் கரங்களை மிக வலுவாகப் பிடித்தனர்.

    Advertisement

    காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முழு மூச்சாக திமுகவின் பக்கம் நின்றபோதும், அந்தப் பலமான அரணை உடைத்து விஜய் பெற்ற இந்த 35 சதவீத வாக்கு வங்கிதான் இன்றைக்கு அவரது மிகப்பெரிய அரசியல் மூலதனமாக நிற்கிறது.

    திமுகவுக்கான தேவை வேறு... தவெகவின் பலம் வேறு

    2016 முதலே ஆட்சியைப் பிடிக்கவும், தக்கவைக்கவும் காங்கிரஸின் வாக்கு வங்கி திமுகவுக்கு மிக அவசியமான ஒன்றாக இருந்தது. அந்த இடைவெளியைப் பயன்படுத்தி காங்கிரஸ் தலைமை திமுகவிடம் பேரம் பேசியது. ஆனால், தவெகவைப் பொறுத்தவரை கள நிலவரம் முற்றிலும் தலைகீழானது.

    தேர்தலுக்கு முன்பாக தவெகவுடன் முன்கூட்டியே முறைப்படியான கூட்டணியை இறுதி செய்யாமல், திமுக பக்கமே நின்று கடைசி நேரத்தில் முடிவெடுத்ததன் மூலம் காங்கிரஸ் தனது மிகப்பெரிய பேர பலத்தை ஆரம்பத்திலேயே இழந்துவிட்டது. இப்போது காங்கிரஸ் கட்சியால் தவெக அமைச்சரவையில் பலன் இருக்கலாமே தவிர, காங்கிரஸ் இல்லாவிட்டால் தவெகவால் நிற்கவே முடியாது என்ற நிலை இங்கு கிடையாது.

    Advertisement

    விஜய்யின் நிபந்தனைக்குட்பட்டே 2029 களம்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2019 மற்றும் 2024 தேர்தல்களில் எந்தவித நிபந்தனையும் இன்றி ராகுல் காந்தியை முன்மொழிந்ததைப் போல, விஜய் எப்போதுமே அப்படியே சரணடைந்துவிட மாட்டார். 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை விஜய் ராகுல் காந்தியின் பிரதமர் வேட்பாளர் தேர்வுக்கு ஆதரவளிப்பதாக இருந்தாலும், அது ராகுல் காந்தியின் நிபந்தனைகளின்படி அமையாது; மாறாக முழுமையாக விஜய்யின் அரசியல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இருக்கும்.

    தேசிய அரசியலில் தென்னிந்தியாவின் உரிமைகள், தொகுதி மறுவரையறை, நிதிப் பகிர்வு மற்றும் தவெகவின் 100 தொகுதிகள் இலக்கு போன்ற தனது கட்சியின் தனித்துவமான திட்டங்களுக்கு உடன்பட்டால் மட்டுமே இந்த ஆதரவு சாத்தியமாகும்.

    Advertisement

    உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களைப் பொருட்படுத்தாத தலைமை

    தமிழகத்தில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் ஊடகங்களில் தவெகவுக்கு எதிராகப் பேசி வருவதை விஜய் துளியும் சட்டை செய்யப் போவதில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஏனெனில், அந்த காங்கிரஸ் தலைவர்கள் சட்டசபைக்குள் நுழைந்ததே திமுகவின் வாக்கு பலத்தால்தான். ஆனால், விஜய் வெற்றி பெற்றதோ அந்த காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நின்ற எதிர்ப்பையும் மீறித்தான்.

    இத்தகைய எதார்த்தங்களை மறந்துவிட்டு, தவெக அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என காங்கிரஸ் மிரட்டுவது, தவெகவை விட காங்கிரஸுக்கே தமிழகத்தில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதை டெல்லி மேலிடமும் உள்ளூர் தலைவர்களும் உணர வேண்டிய தருணம் இது.

    English Summary

    CM Vijay’s 35% Solo Mandate Changes 2029 Equation for Rahul Gandhi