சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் முதல்வர் விஜய் ஆய்வு.. வெளியே ஊழியர்கள் போராட்டம்!

  • சென்னை: சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ஆய்வு நடத்திய அதேநேரத்தில் அலுவலகத்தின் பின்புற வாயில் அருகே மின்வாரிய ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.

    Advertisement

    தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து எதிர்க்கட்சிகளும் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று திடீரென சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    இந்த ஆய்வின்போது, தமிழ்நாட்டில் நிலவும் மின் உற்பத்தி மற்றும் மின் தேவையின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். பிறகு ஆய்வை முடித்துக்கொண்டு முதல்வர் விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார்.

    முதல்வர் விஜய், மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு ஆய்வு மேற்கொண்டிருந்த அதே சமயத்தில், மின் வாரிய அலுவலகத்தின் பின்புற வாயில் அருகே மின்வாரிய ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். உள்ளே முதல்வர் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது வெளியே ஊழியர்கள் போராட்டம் நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்த ஆய்வு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் 600 துணை மின் நிலையங்களை உருவாக்கும் பணிகள் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வு செய்தோம். மின் தேவை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். தேர்தலுக்காக பராமரிப்பு பணியை தள்ளிப் போட்டதால், தற்போது பழுது ஏற்படுகின்றன.

    மின்தடைக்காக மக்கள் கோபப்படாமல், சீரமைக்க அவகாசம் தர வேண்டும். தமிழகத்தில் 600 துணை மின் நிலையங்கள் தேவை, 6 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு செய்யப்படாத நிலையில் லோடு தாங்க முடியாமல் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைகின்றன; 20 ஆண்டுகள் பழமையான துணை மின் நிலைய மேம்பாடு குறித்த திட்டத்தை முதல்வரிடம் அளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    While Chief Minister Vijay was conducting an inspection inside the Chennai Electricity Board headquarters today, EB employees staged a protest near the rear entrance, raising slogans and pressing for various demands, including the restoration of the Old Pension Scheme.