விஜய் தலைமையில் கூடிய முதல் அமைச்சரவை.. கசிந்த ரகசிய அஜெண்டா! கோட்டையை அதிரவைக்கும் பரபரப்பு முடிவு

  • சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. வெற்றித் தமிழகம் என்ற பெயரில் இன்றைய அமைச்சரவை கூட்டம் துவங்கி உள்ளது.. தேர்தல் வாக்குறுதிகளான இலவச மின்சாரம், பயிர் கடன் தள்ளுபடி மற்றும் மகளிர் உரிமைத் தொகை உயர்வு போன்ற முக்கியத் திட்டங்களை அமல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட் தயாரிப்பு மற்றும் டாஸ்மாக் பிரச்சனைகள் குறித்தும் முதலமைச்சர் தனது அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, கடந்த மே மாதம் 4ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் த.வெ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து, கடந்த மே 10ம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து த.வெ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வையும் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் மீது திரும்பியது.

    இந்தச் சூழ்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.

    Advertisement

    இந்த மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் த.வெ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.. புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வக் கூட்டம் இது என்பதால், தலைமைச் செயலக வளாகமே தற்போதைய சூழலில் பெரும் பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது புதிதாக அமைந்திருக்கும் த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் விஜய் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. வெற்றி தமிழகம் என்ற பெயரில் தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

    Advertisement

    இந்த கூட்டத்தில் நிதி, தொழில்முதலீடு சார்ந்த திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாம்ல, தமிழக பட்ஜெட், ஆளுநர் உரை, மேகதாது, டாஸ்மாக், நிதி குறித்த வெள்ளை அறிக்கை, மகளிருக்கான ரூ.2500 குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "விவசாயிகள் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு, இளைஞர்கள் மேம்பாடு, லஞ்சமற்ற தமிழகம் உள்ளிட்ட 436 திட்டங்களை அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் முன் வைத்தார்" என்றார்.

    English Summary

    Magalir Urimai Thogai of ₹2,500 to be Implemented Immediately? Suspense Builds as CM Vijay Chairs Intense First Cabinet Meeting