விஜய் இப்படித்தான் சொல்லிகிட்டே இருக்காரு.. வீடியோ காலில் லண்டலில் இருந்து.. சங்கீதா வைத்த ஷாக் வாதம்

  • சென்னை: முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து மனு மீதான விசாரணை, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றும் வழக்கில் விசாரணையை ஒத்திவைக்க விஜய் தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் விஜய் இதே காரணத்தை தொடர்ந்து கூறுவதாக சங்கீதா வாதம் வைத்தார்.

    Advertisement

    நீதிமன்ற வளாகத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் காரசாரமான வாதங்களை முன்வைத்த நிலையில், வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    சட்டப்பேரவை கூட்டத்தொடரைக் சுட்டிக்காட்டிய விஜய் தரப்பு

    இன்றைய வழக்கு விசாரணையின் போது, முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். "தற்போது தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மிக முக்கியமான கட்டத்தில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்வது அவசியமாக உள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை வேறொரு தேதியை நிர்ணயித்து ஒத்திவைக்க வேண்டும்" என்று விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

    மேலும், முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அவர் நேரில் ஆஜராவதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், போக்குவரத்து நெரிசல் மற்றும் நடைமுறைச் சிக்கல்களையும் சுட்டிக்காட்டி விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

    Advertisement

    "இன்றே விசாரிக்க வேண்டும்" - சங்கீதா தரப்பு உறுதியான கோரிக்கை

    அதேவேளையில், இந்த வழக்கில் மனுதாரரான சங்கீதா தரப்பில் லண்டனில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக வழக்கறிஞர் ஆஜரானார். விஜய் தரப்பின் ஒத்திவைப்பு கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த சங்கீதா தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்து மனு தாக்கல் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களைக் கூறி விசாரணை தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. எனவே, மேற்கொண்டு காலதாமதம் செய்யாமல், வழக்கை இன்றே நேரில் அல்லது காணொலி வாயிலாக முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று மிக உறுதியாகக் கோரிக்கை வைத்தார்.

    Advertisement

    காணொலி வாயிலாகவே இரு தரப்பு வாக்குமூலங்களையும் பெற்று விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்பதில் சங்கீதா தரப்பு உறுதியாக இருந்தது.

    செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

    இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்ட செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, வழக்கை உடனடியாக வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க மறுத்துவிட்டார். சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் இருதரப்பு கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, வழக்கு விசாரணையை அன்றைய தினத்தின் பிற்பகல் நேரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    பிற்பகல் விசாரணை தொடங்கும் போது விஜய் தரப்பில் காணொலி மூலம் ஆஜராவதற்கான இணையதள முகவரி சமர்ப்பிக்கப்படுமா அல்லது வழக்கை சமரச மையத்திற்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Advertisement

    வழக்கு பின்னணி

    கடந்த 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

    அதில் நிரந்தர ஜீவனாம்சம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கான உரிமை ஆகியவற்றைக் கோரியிருந்தார். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை, தமிழக அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் தொடர்ந்து உற்றுநோக்கப்பட்டு வருகிறது. பிற்பகல் நிகழவிருக்கும் நீதிமன்ற உத்தரவுகள் இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    CM Vijay-Sangeetha Divorce Case: Chengalpattu Court Adjourns Hearing