புண்ணியவான்கள் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் போட்ட ஓட்டை! முதல்வர் விஜய் கடும் விமர்சனம்


  • சென்னை: 2017 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் வரை ஆண்ட புண்ணியவான்கள் போட்ட ஓட்டைகளை அடைக்க வேண்டும். எனவே மக்களே எனக்கு சிறிது கால அவகாசம் கொடுங்கள் என முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார்.

    Advertisement

    17ஆவது தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    அந்த வகையில் கடந்த 2 நாட்களாக ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் விவாதம் நடந்தது. இதையடுத்து இன்றைய தினம், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்வர் விஜய் பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், நான் அப்படியே சூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதல்வரானது போல் சிலர் பேசி வருகிறார்கள். எனது வெற்றிக்கும் நான் மட்டுமே காரணம் அல்ல, மக்களின் அன்பும், அரவணைப்பும்தான் காரணம்.

    1990 ஆம் ஆண்டுகளில் ரசிகர் மன்றமாக இருந்த போதே மக்களுக்கு துணையாக நின்றோம். நான் நடித்த திரைப்படங்களில் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி, கல்வி பற்றி பேசினேன்.

    Advertisement

    அரசியல் பற்றி பேசியதாலேயே நமது படங்கள் சந்தித்த, இதுவரை சந்திக்கும் பிரச்சினைகள் எல்லோருக்கும் தெரியும். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியவுடனேயே சிஏஏ திட்டத்தை எதிர்த்து அறிக்கை கொடுத்தோம். ஈழத் தமிழர்களுக்கான குரல் கொடுத்தோம். 2008ஆம் ஆண்டு அவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தோம்.

    2017 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் வரை ஆண்ட புண்ணியவான்கள் போட்ட ஓட்டைகளை அடைக்க வேண்டும். எனவே மக்களே எனக்கு சிறிது கால அவகாசம் கொடுங்கள். இவ்வாறு விஜய் பேசினார். எடப்பாடி பழனிசாமி முதல் ஸ்டாலின் வரை அரசு நிர்வாகத்தில் குளறுபடி செய்துவிட்டதாக விஜய் விமர்சித்துள்ளார்.

    English Summary

    CM Vijay: Chief Minister Vijay urged people to give him time, stating that his government must address and correct issues accumulated between 2017 and March 2026.