தமிழ்நாட்டில் ஏற்படும் குற்றங்கள் 100 நாட்களில் தோன்றியவை இல்லை.. சட்டசபையில் முதல்வர் விஜய் பதிலுரை

  • சென்னை: தமிழக சட்டசபை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடியது. கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பொறுப்பு வகிக்கும் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தார். அந்த கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலளித்து பேசி வருகிறார்.

    Advertisement

    தமிழ்நாட்டி ஏற்படும் குற்றங்கள் 100 நட்களில் தோன்றியது இல்லை.. ஒரு மாநிலத்தின் அமைதியில்தான் முன்னேற்றம் உள்ளது.. சொத்து தகராறு, போதை பொருள், பழிவாங்கும் எண்ணம் குற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம்.. என விஜய் பேசி வருகிறார்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதை அடுத்துக் கடந்த 5ஆம் தேதி 2026 2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் ஐந்தாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தொடர்ந்து பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து 7 முதல் 11ஆம் தேதி வரை சட்ட சபையில் விவாதம் நடைபெற்றது.

    Advertisement

    இதில் தமிழக வெற்றிக்கழகம், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதை அடுத்து 12-ஆம் தேதி வேளாண் மற்றும் பொது பட்ஜெட் குறித்து துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். பொது பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு நிதியமைச்சர் மரிய வில்சன், வேளாண் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் வினோத்தும் பதில் அளித்தனர்.

    இதை அடுத்து பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்தன. துறை ரீதியான மானிய கோரிக்கை வீமீதான விவாதம் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 3ஆம் தேதி முதலமைச்சர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

    Advertisement

    இதை அடுத்து பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்தன. துறை ரீதியான மானிய கோரிக்கை வீமீதான விவாதம் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 3ஆம் தேதி முதலமைச்சர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

    போதைப் பொருள் விவகாரம், பெண்கள் பாதுகாப்பு, சிங்கப்பெண் பாதுகாப்பு படையில் இருக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை, ஆணவக் கொலை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததோடு, இது தொடர்பாக முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என பேசினார். அப்போது திமுகவுக்கும் ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.

    Advertisement

    தொடர்ந்து சட்டசபையில் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய்," இந்த கேள்விகளுக்கெல்லாம் நான் திங்கள்கிழமை பதில் சொல்வேன் அப்போது யாரும் ஓடி விடக்கூடாது" என பேசிவிட்டு அவையை விட்டு வெளியேறினார். அப்போது, "ஓடக்கூடாது என சொல்லிவிட்டு யார் ஓடுகிறார்கள் என பாருங்கள் என பதிலடி கொடுத்தார் உதயநிதி ஸ்டாலின்.

    இந்த நிலையில் கோகுலாஷ்டமி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் சட்டசபை இன்று கூடியது. அவை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வரும் தனித்தீர்மானத்தை எடுக்க கோரி திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.

    Advertisement

    இதையடுத்து, முதல்வர் விஜய் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளிக்க தொடங்கினார். தமிழ்நாட்டி ஏற்படும் குற்றங்கள் 100 நட்களில் தோன்றியது இல்லை எனவும், ஒரு மாநிலத்தின் அமைதியில்தான் முன்னேற்றம் உள்ளது. சொத்து தகராறு, போதை பொருள், பழிவாங்கும் எண்ணம் குற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம்' என்று பதிலளித்து பேசிவருகிறார்.

    English Summary

    Tamil Nadu CM Vijay is expected to respond to Udhayanidhi Stalin’s questions on law and order during today’s Assembly session.