கரூர் துயரம்! 31 பேருக்கும் கண்ணீருடன் அரசு பணிக்கான ஆணை வழங்கிய முதல்வர் விஜய்

  • கரூர்: கண்ணீர் சிந்தியபடியே பணியாணைகளை முதல்வர் விஜய் வழங்கினார் என கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட விமல் என்பவர் உருக்கமாக தெரிவித்தார்.

    Advertisement

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது விஜய்யை பார்க்க ஏராளமான கூட்டம் கூடியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என 41 பேர் பலியாகிவிட்டனர்.

    Advertisement

    இந்த சம்பவம் நடந்து 285 நாட்களாகியுள்ள நிலையில் முதல்வராகியுள்ள விஜய் தற்போது முதல் முறையாக கரூருக்கு சென்றார். கரூர் கூட்ட நெரிசலில் பலியான 36 குடும்பத்தினரில் 31 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசியல் கூட்டங்களில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை கொடுத்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என எதிர்த்து வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கலாம். ஆனால் மறு உத்தரவு வரும் வரை அவர்களுக்கு தற்காலிக பணி கொடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் காலை கரூர் வெண்ணெய்மலையில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசிய விஜய், மதியம் 1 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார்.

    அங்கு கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் விஜய் பணியாணை வழங்கினார். அப்போது ஒவ்வொருவரிடமும் ஆணை வழங்கும் போது கண்ணீர் விட்டபடியே இருந்தார் என அரசு பணி பெற்ற விமல் என்பவர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வின் போது அரசு பணி வேண்டாம் என சொன்ன 5 குடும்பத்தினரை விஜய் அழைத்துபேசினார். மேலும் எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேட்குமாறும் அவர்களிடம் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பணியாணை வழங்கப்பட்ட நிலையில் யாருக்கு என்னென்ன துறை என்பதை பார்க்கலாம்.

    க. சாந்தி,க/பெ. கந்தசாமி, ஈரோடு மாவட்டம், கருணைத் தொகை 10,00,000/-(ரூபாய் பத்து இலட்சம் மட்டும்). இவர் அரசு பணி வேண்டாம் என சொல்லிவிட்டதால் கருணைத் தொகை வழங்கப்பட்டது.

    1. ஆனந்தஜோதி,த/பெ. பாஸ்கர், இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித் துறை, கரூர் மாவட்டம்

    2. மா. நிவேதா, த/பெ. மாணிக்கம், ஜெகதாபுரம், இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித் துறை, கரூர் மாவட்டம்

    3.க. கலைச்செல்வி,க/பெ. வடிவழகன், கரூர் அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு, கரூர் மாவட்டம்

    Advertisement

    4.செந்தில்குமார், த/பெ. செல்வராஜ், கரூர் வட்டம் அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு, கரூர் மாவட்டம்

    5.வெ. விமல்,த/பெ. வெங்கடேஷ், கரூர் அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு,

    6.வை. சவகலி, த/பெ. பெருமாள், கரூர் மாவட்டம்- 639005 இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித்துறை, கரூர் மாவட்டம்

    7.பா. ரகுநாதன்,த/பெ. பாலகிருஷ்ணன், இரவு காவலர், மாவட்ட வருவாய் அலகு, கரூர் மாவட்டம்

    8. பெ. செல்வராணி, க/பெ. பெருமாள், மாவட்ட வருவாய் அலகு, கரூர் மாவட்டம்

    9. சதிவ்யா, த/பெ. சக்திவேல், இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித் துறை, கரூர்

    Advertisement

    10.க. கிருஷ்ணமூர்த்தி, த/பெ. கந்தசாமி, இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித்துறை

    11.மோனிஷா, த/பெ. மணி, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கரூர் மாவட்ட அலகு

    12. ப. சந்திரகலா, க/பெ. சரவணன், இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கரூர் மாவட்டம்

    13.ச. மகாலட்சுமி, த/பெ. சக்திவேல்,இளநிலை உதவியாளர், காவல்துறை, கரூர் மாவட்டம்

    14. பா. தனலட்சுமி, க/பெ. கணேசன், இளநிலை உதவியாளர், காவல்துறை, கரூர் மாவட்டம்

    15. சு. முருகன், த/பெ. சுப்பிரமணி, கரூர், அலுவலக உதவியாளர், கரூர் மாவட்ட அலகு

    16. செ. பிரபாகரன்-இளநிலை உதவியாளர் - பதிவுத் துறை

    17. ம. ஷர்மிளா-இளநிலை உதவியாளர் - பதிவுத் துறை

    18. ச. சந்தியா- இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

    19.அஸ்வின்குமரன்-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

    20.ச. சுதன்- அலுவலக உதவியாளர் - கரூர் மாவட்ட அலுவலகம்

    21. அகிலா- அலுவலக உதவியாளர் - மாவட்ட வருவாய் அலுவலகம் (ஈரோடு)

    22. குணசேகர்- இளநிலை உதவியாளர் - பேரூராட்சித் துறை (ஈரோடு)

    23. ஜெயபிரகாஷ்-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சித் துறை (திருப்பூர்)

    24. நிவேதிதா-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திருப்பூர்)

    25. தீபலட்சுமி- இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

    26. மல்லிகா-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திண்டுக்கல்)

    27.பிரபாகரன்- இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திண்டுக்கல்)

    28.ஜோதி இரவு காவலர் - பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி
    (சேலம்)

    29. ம. பிரியதர்ஷினி-இளநிலை உதவியாளர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

    30.க. சக்திவேல்- இளநிலை உதவியாளர் - பள்ளிக் கல்வித் துறை

    31.ந. யோகேஷ்குமார்- இரவு காவலர் - மாவட்ட வருவாய் அலுவலகம்

    இவர்களில் 17 ஆண்கள், 4 பெண்கள் ஆவர்.

    English Summary

    CM Vijay tears when he distributed Job offers for the 31 people who lost their loveable persons in Karur Stampede.