சிஎம் விஜய் சார்! எங்க இருக்கீங்க? தர்மேந்திர பிரதான் ரிசைன் செய்துட்டாரு தெரியுமா? பிரபலம் கேள்வி

  • சென்னை: நீட் தேர்வுக்கு தொடர்பான போராட்டத்தில் ஒரு மத்திய அமைச்சர் ராஜினாமா செய்த நிலையிலும் முதல்வர் விஜய் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது சரியில்லை என மூத்த பத்திரிகையாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஹலோ விஜய் சார், முதல்வர் சார், எங்க சார் இருக்கீங்க? சப்தமே இல்லையே! கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்தால் ஒரு மத்திய அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். நீங்கள் சொல்வதற்கு எதுமே இல்லையா?

    Advertisement

    உங்களது அரசியல் வாழ்க்கையை அரியலூர் அனிதாவின் வீட்டிலிருந்து ஆரம்பித்ததை நான் பார்த்து வருகிறேன். அங்கு போய் நீங்கள் தரையில் உட்கார்ந்து, அவர்களது துக்கத்தை பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு ஆதரவு சொல்லிவிட்டு, உங்கள் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தீர்கள்.

    அதன்பிறகு என்ன நடந்தது? ஆட்சிக்கு வந்ததும் எல்லாத்தையும் மறந்துவிட்டீர்களா? நீட்டை கண்டித்து சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்ற போது மெரினா கடற்கரைக்குள் நுழைய தடை விதிப்பது சரியா? அங்கு அப்படி யார் நுழைந்துவிட போகிறார்கள். டிரோன்கள் இருக்கின்றன, டிஜிபி ஆபிஸ் இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடந்துள்ளன.

    Advertisement

    அந்த போராட்டத்தில் கூட ஒரு பிரச்சினையும் வரவில்லை. நீங்கள் அப்போது இருந்த காவல் துறை அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டு பாருங்கள். அங்கு அசம்பாவிதமே எதுவும் நடக்கலையே! அப்படியிருக்கும் போது இருக்கும் இடங்களையெல்லாம் போராட்டக்காரர்கள் நுழைந்து விடாமல் இருக்க தடைவிதித்து விட்டு அவர்கள் எழும்பூரில் போராடினால் அடிக்கிறீர்கள்.

    நீட்டுக்கு சட்டசபையில் மட்டும்தான் குரல் கொடுத்தீர்கள். அதன் பிறகு எந்த குரலையும் கொடுக்கவில்லை. டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்திய போது நள்ளிரவு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளீர்கள்.

    அதன் பிறகு உங்கள் பெயரில் இன்னொரு செய்திக் குறிப்பு (பிரஸ் ரிலீஸ்). நிறைய நிருபர்கள் வெளியே காத்திருந்தார்கள். அவர்களிடம் நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கலாம். அவர்கள் அதையும் மீறி வேறு கேள்விகளை கேட்டால் , நீங்கள் பாட்டுக்கு திரும்பி பார்க்காமல் சென்று விடலாம். இப்படி பிரஸ் மீட் வைப்பதைத்தானே முன்னாள் முதல்வர்கள் எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள்.

    Advertisement

    ராஜ்மோகனை அனுப்பியிருந்தீர்கள். நான் அப்போதே நினைத்தேன், அவர் போராட்டக் களத்திற்கு சென்றால் பிரச்சினையாகிவிடும் என! அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்காது என சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் நல்ல அமைச்சர்!

    அவரை இந்தளவுக்கு மாணவர்கள் கேலி செய்ததில் எனக்கு உடன்பாடில்லை. ராஜ்மோகன், அருண்ராஜ், வன்னியரசு போன்ற 3 அல்லது 4 நபர்களின் தோளில்தான் தவெக அரசின் மொத்த இமேஜும் உள்ளது. உங்களது கூட்டணி கட்சியினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாலன் இல்லத்தில்தான் இத்தனை பெரிய போராட்டம் நடைபெறுகிறது. விஜய் அங்கு சென்று பேசியிருக்கலாம். விசிகவும் நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    Advertisement

    நீங்கள் பேசவில்லை. பாஜகவுக்கு எதில் எல்லாம் ஒத்தாசை செய்ய முடியுமோ அப்படி செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற பிம்பம் உருவாகிவிட்டது. தயவு செய்து கவனத்தில் வைத்து செயல்படுங்கள். நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற விஜய் இதுவரை ஒரு முறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Senior Journalist Radhakrishnan says that CM Vijay should raise voice against Neet issue.