என்னுடைய விஷ்ணு ரெட்டிக்கே அனுமதியில்லையா.. ‘விஐபி ரூட்' வேண்டாம் என புறக்கணித்து லண்டன் சென்ற விஜய்

  • சென்னை: முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டன் புறப்பட்டபோது சென்னை விமான நிலையத்தில் முதல்வர் விஜய்யின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு விஐபி கேட்டில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியான விஜய் தனக்கான விஐபி கேட் வசதியை புறக்கணித்த சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் பிரிட்டன் புறப்பட்டு சென்றுள்ளார். விஜய் முதல்வரான பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் விஜய் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    Advertisement

    நேற்று லண்டன் புறப்பட்டு சென்ற முதல்வர் விஜய் வரும் 17 ம் தேதி மீண்டும் தமிழகம் திரும்ப உள்ளார். முதல்வர் விஜய் உடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தெழில்நுறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், அரசு அலுவலர்கள், முதல்வர் விஜய்யின் ஆலோசகர்கள் உள்ளிட்டவர்கள் சென்றுள்ளனர்.

    இந்த பயணத்தில் முதல்வர் விஜய்யின் ஆலோசகராக உள்ள விஷ்ணு ரெட்டியும் சென்றுள்ளார். இந்நிலையில் தான் முதல்வர் விஜய் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் புறப்பட்டார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் விஐபி கேட் என்று ஒன்று உள்ளது.

    Advertisement

    இது விமான நிலையத்திற்கு வரும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வழியாகும். இருப்பினும் ஒவ்வொரு மாநில முதல்வர்களும், ஆளுநர்களும் அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இந்த விஐபி கேட் வசதியை அனுமதியுடன் பயன்படுத்தி கொள்ள முடியும்.

    அந்த வகையில் முதல்வர் விஜய்யின் அலுவலகம் சார்பில் நேற்று சென்னை விமான நிலையத்தில் விஐபி கேட் வசதியை விஜய் பயன்படுத்த சிவில் விமான போக்குவரத்து பணியகத்திடம் அனுமதி கோரப்பட்டது. அதனை பரிசீலனை செய்த சிவில் விமான போக்குவரத்து பணியகம் முதல்வர் விஜய் விஐபி கேட்டை பயன்படுத்த அனுமதி வழங்கியது.

    Advertisement

    அதேவேளையில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை காரணம் காட்டி விஜய்யின் ஆலோசகரான விஷ்ணு ரெட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முதல்வர் விஜய் மட்டுமே இந்த விஐபி கேட் வழியாக செல்லலாம். மற்றவர்கள் விமான நிலையத்தில் மற்ற பயணிகள் பயன்படுத்தும் வழியில் தான் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் விஜய் இதனை ஏற்கவில்லை. தனது ஆலோசகர் விஷ்ணு ரெட்டியை விட்டுவிட்டு தான் மட்டும் விஐபி கேட் வழியாக என்ட்ரி கொடுப்பதை விஜய் விரும்பவில்லை. இதனால் அவர் விமான நிலையத்தின் விஐபி கேட்டை பயன்படுத்த மறுத்ததோடு, மற்ற பயணிகளைப் போலவே சாதாரணமாகவே விமான நிலையத்துக்குள் வர உள்ளதாக தெரிவித்தார்.

    Advertisement

    இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் கேட் எண் டி9 வழியாக முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அதுமட்டுமின்றி விமான நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போட்டு இருந்தனர்.

    English Summary

    CM Vijay departed for London yesterday to attract industrial investments. At the Chennai airport, his advisor, Vishnu Reddy, was denied access through the VIP gate. Displeased by this, Vijay chose to forgo the VIP gate facility himself.