பேசி முடிக்கும் முன்பு பின்னால் திரும்பி பார்த்து சிரித்த முதல்வர் விஜய்! அமைச்சர்கள் செம ரெஸ்பான்ஸ்

  • சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை ஆற்றி முடிக்கும்போது, பின்னால் இருந்து உறுப்பினர்கள் கமெண்ட் அடித்ததால் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டே வாசித்தார் முதல்வர் விஜய். இதனால், அமைச்சர்கள் உற்சாகமடைந்து மேஜையைத் தட்டினர்.

    Advertisement

    காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பதிலளித்து உரையாற்றினார். சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் பேசுகையில், "செய்கிற தவறுகளையே ஒழுங்காகவும் முறையாகவும் செய்திருக்கிறார்கள். இவர்கள் மீதான வழக்குகளில் உச்ச நீதிமன்றம்தான் பெயில் வழங்கியதாகக் கூறுகின்றனர். பெயில் கொடுத்ததால் விசாரிக்கக் கூடாது என உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் சொல்லவில்லையே.

    Advertisement

    2 துறைகளின் ஃபைல்களை ஓபன் பண்ணதுக்கே இப்படியென்றால், மற்ற துறைகளின் ஃபைல்ககளைத் திறந்தால் எத்தனை பூதங்கள் கிளம்புமோ தெரியவில்லை. தவறு செய்துவிட்டு மாட்டிக் கொள்பவர்கள் ஒரு ரகம், செய்த தவறுகளிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என தயார் செய்துவிட்டு மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்பவர்கள் இன்னொரு ரகம். நம் தோழர்கள் இரண்டாவது ரகம்.

    திமுக இருக்கும் இடங்களில்தான் தவறுகள் நடக்கும். தவறுகள் நடக்கும் இடத்தில்தான் திமுக இருக்கும். நான் அல்லது அமைச்சர்கள் யாரும் ஊழல் என்று சொன்னால், ஆதாரங்களைக் கொடுக்கச் சொல்லி எதிர்க்கட்சியினர் உடனே எழுந்து விடுவார்கள். ஆனால், இதுவரையில் ஊழலே செய்ததில்லை என சொன்னதில்லை. ஊழல் செய்தவர்கள்தான் ஆதாரம் கேட்பார்கள். ஊழலே செய்யாதவர்கள் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

    Advertisement

    அரை நூற்றாண்டுக்கும் கீழே ஆழமாகச் சென்று, தோண்டியெடுத்து, மக்களை ஏமாற்றுகிற அந்த போலி பிம்பமும் போலி பிராண்டும் உடைக்கப்படும் என்று எச்சரிக்கையாக அல்லாமல் பணிவன்புடன் சொல்லிக் கொள்கிறேன்.

    கடந்த திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீரழிவு, போதைப்பொருள் பயன்பாடு இருந்தன சட்டம், ஒழுங்கு பற்றி பேசுவதற்கு முன் உங்கள் ஆட்சியில் நடந்ததை கண்ணாடியில் பார்ப்பது நல்லது. மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசாவை பற்றிய வரலாறு எனக்கும் தெரியும். 1967ல்அண்ணா, 1977ல் எம்ஜிஆர், 1983ல் என்டிஆர், 2026ல் விஜய். இயற்கையும் இறைவனும் நம்ம பக்கம் தான் இருப்பார்கள்.

    Advertisement

    அன்புக்கு முன்னாடி அவர்கள் தோற்பது உறுதி. இந்த நாற்காலிக்காகவோ அதிகாரத்துக்காகவோ நான் இங்கு வரவில்லை. மக்களுக்கு உண்மையாக நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவும், இன்னும் சொல்லப்போனால் நன்றிக் கடன் செலுத்துவதற்காகவும் மட்டுமே இங்கு வந்துள்ளேன்" என்று பேசினார்.

    மேலும் பேசிய முதல்வர் விஜய், "பேரவைத் தலைவர் அவர்களே.. உறுப்பினர்களால் வழங்கப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான வெட்டுத் தீர்மானங்களை நான் படித்துப் பார்த்தேன். அதை பரிசீலித்து இந்த அரசு ஏற்கும். எனவே மாண்புமிகு உறுப்பினர்கள் எனது பதிலுரையில் கூறிய விளக்கத்தை ஏற்றுக்கொண்டு தங்களது வெட்டுத் தீர்மானங்களை திரும்ப ஏற்றுக்கொண்டு இந்த மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

    Advertisement

    விஜய் இவ்வாறு பேசும்போது பின்னால் இருந்து உறுப்பினர்கள் கமெண்ட் அடித்ததால் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டே வாசித்தார் முதல்வர் விஜய். இதனால், தவெக அமைச்சர்கள் உற்சாகமடைந்து மேஜையைத் தட்டினர்.

    English Summary

    As Tamil Nadu Chief Minister Vijay was concluding his reply to the debate on the demands for grants for the Police Department today, he turned around and smiled while reading his speech after TVK MLAs made comments from behind; this prompted the ministers to enthusiastically thump their desks.