தலைமை செயலகத்தில் உள்ள தேவாலயத்திற்கு திடீரென சென்ற முதல்வர் விஜய்.. வியந்து போயிட்டாராமே!

  • சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களை அவர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க புனித மேரி தேவாலயத்தையும் அவர் பார்வையிட்டார். அங்குள்ள பழங்கால ஆர்கன் உள்ளிட்டவற்றை விஜய் பார்வையிட்டார். மத்திய அரசின் தொல்லியல் துறை அலுவலகங்கள் உள்ள இடம், ராணுவ மைதானம் ஆகியவற்றையும் விஜய் பார்வையிட்டார்.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் நேற்று சென்னை தலைமை செயலக வளாகத்தை சுற்றி பார்த்தார். நேற்று மதிய உணவை முடித்த பிறகு தலைமை செயலகத்தை சுற்றி பார்க்க பேட்டரி காரில் விஜய் புறப்பட்டார். வழக்கமாக கோட் அணிந்துகொண்டே தலைமை செயலகத்தில் காணப்படும் விஜய் நேற்று கோட்டை கழற்றிவிட்டு, வெள்ளை நிற சர்ட், கருப்பு நிற பேண்ட் அணிந்து இருந்தார்.

    Advertisement

    தலைமை செயலக தேவாலயத்தில்..

    பேட்டரி காரில் தலைமை செயலக வளாகத்தை சுற்றி வந்த விஜய்யை காண தலைமை செயலக ஊழியர்களும் ஆர்வம் காட்டினர். இதனால், பலத்த பாதுகாப்பு புடை சூழ விஜய் அழைத்து செல்லப்பட்டார். தலைமை செயலகத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் தேவாலயத்திற்கு விஜய் சென்றார். அங்குள்ள பழங்கால ஆர்கன் உள்ளிட்டவற்றை விஜய் பார்வையிட்டார்.

    தொடர்ந்து அங்கிருந்து மத்திய அரசின் தொல்லியல் துறை அலுவலகங்கள் உள்ள இடம், ராணுவ மைதானம் ஆகியவற்றையும் பார்வையிட்ட விஜய், கோட்டை அருங்காட்சியகத்திற்கு சென்றார். அரை மணி நேரத்திற்கும் மேலாக கோட்டையை விஜய் சுற்றி பார்த்தார். தலைமைச் செயலகத்தைச் சுற்றியிருந்த அகழி, அதில் முதலைகள் இருந்த நீண்டகால வரலாறு, மற்றும் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ஆகியவை பற்றியும் முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

    Advertisement

    பேட்டரி காரில் சென்ற விஜய்

    இதனை ஆர்வமாக விஜய் கேட்டறிந்தார். அரை மணிநேரத்திற்கும் மேலாக கோட்டையை சுற்றி பார்த்த விஜய், பின்னர் தனது அலுவலக அறைக்கு சென்றார். விஜய்யை பார்ப்பதற்காக அங்கு பணியாற்றும் ஊழியர்கள், அங்கு இருப்பவர்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வம் காட்டினர். பேட்டரி காரில் சென்ற போது அங்கு திரண்டு இருந்த மக்களை பார்த்த விஜய் உற்சாகமாக கை அசைத்தார்.

    விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் பலரும் தங்கள் செல்போனிலும் அவரை படம் பிடித்தனர். தமிழக முதல்வராக விஜய் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நாளில் இருந்து விடுமுறை நாட்கள் நீங்கலாக நாள்தோறும் முதல்வர் விஜய் காலை 10 மணிக்கு முன்பாக தலைமை செயலகம் வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாலை 4 மணிக்கு பிறகே தலைமை செயலகத்தில் இருந்து புறப்படும் விஜய், அலுவல் ஆய்வு கூட்டங்கள் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை தொடர்ந்து நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    Advertisement

    தலைமை செயலக ஊழியர்கள் இடையே விஜய்யின் இந்த செயல் வியப்பை அளித்துள்ளதாம். தலைமை செயலகத்திற்கு 10 நாட்களுக்கும் மேலாக விஜய் வந்த நிலையில், இந்த பிரம்மாண்டமான வளாகத்தை முழுமையாக ஆய்வு செய்ய விஜய் விரும்பியுள்ளார். இதன் காரணமாக, இன்று ஒரு விரிவான ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay made a surprise visit to the historic St. Mary’s Church located inside the Secretariat campus at Fort St. George in Chennai. During his inspection of government offices, he also explored the church’s antique organ and visited nearby Archaeological Survey offices and the military ground.