கன்ட்ரோலை கையில் எடுத்த தவெக! சுற்றி வளைத்த விஜய்.. அடுத்து என்ன? திட்டமிடும் திமுக கவுன்சிலர்கள்

  • சென்னை: சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 200 வார்டுகளில், 152 வார்டுகளில் திமுகவை சேர்ந்தவர்கள்தான் கவுன்சிலர்களாக இருக்கின்றனர். இவ்வளவு ஆதிக்கம் இருந்தும் கூட, அதிகாரிகளை மாற்றி.. கடந்த ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் போடப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இப்படியாக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மாநகராட்சியை கன்ட்ரோலில் எடுத்திருக்கிறார். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க திமுக கவுன்சிலர்கள் கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    Advertisement

    மாநகராட்சிக்குள் திமுகவின் பலம் அசைக்க முடியாதுதான். ஆனால், சட்டமன்ற தொகுதிகள் என்று வரும்போது.. தவெகதான் வெயிட் பார்ட்டியாக இருக்கிறது.

    Advertisement

    சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தவெக 14 தொகுதிகளில் வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது. அதேபோல மாநகராட்சி அதிகாரிகளும் தற்போது மாற்றப்பட்டிருப்பதால்.. மாநகராட்சி கூட்டங்களில் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்துவதில் திமுகவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மாநகராட்சிக்கு என்ன தேவை என்பது கவுன்சிலர்களுக்கு நன்கு தெரியும். அந்த தேவைகளை நிறைவேற்றவே மாநகராட்சி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

    இந்த திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் விடப்படுகின்றன. இப்படி இருக்கையில் 300க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது மாநகராட்சியின் வளர்ச்சியை தடுக்கும் பணி என திமுக கொந்தளித்துள்ளது. ஆனால், ஒப்பந்தங்களில் முறைகேடு இருப்பதால்தான் அது ரத்து செய்யப்பட்டிருப்பதாக புதிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    Advertisement

    மறுபுறும் நகராட்சி துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய்யை, மேயரோ, துணை மேயரோ, மரியாதை நிமித்தமாக சென்று சந்திக்கவில்லை. இதுவே தவெகவுக்கு கடும் அதிருப்தியை கொடுத்திருந்தது.

    இந்த பின்னணியில்தான் ஜூலை.29 அன்று மாநகராட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் என்ன? ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்கு மாற்றாக என்ன செய்வது? எம்எல்ஏக்கள், புதிய அதிகாரிகளை எப்படி சமாளிப்பது போன்ற விஷயங்கள் குறித்து இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் விவாதிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    CM Vijay Takes Control: In the Chennai Corporation, DMK members hold the councillor positions in 152 out of the total 200 wards. Despite this dominance, officials have been reshuffled, and over 300 contracts awarded during the previous administration have been cancelled. In this manner, Chief Minister C. Joseph Vijay has taken control of the Corporation.