ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை.. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்! முதல்வர் விஜய்யின் முக்கிய மூவ்!

  • சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்காக துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று 2வது நாளாக இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இதில் பட்ஜெட்டில் ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    Advertisement

    தவெக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன், தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகவும், தமிழகத்தின் கடன் முன் எப்போதை விடவும் அதிகரித்திருக்கிறது என்றும் முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். இப்படி இருக்கையில் தவெகவின் தேர்தல் அறிவிப்புகள் பட்ஜெட்டில் எதிரொலிக்குமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

    Advertisement

    தேர்தல் அறிக்கை

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2500, அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 6 இலவச சிலிண்டர்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை போன்றவை தவெகவின் தேர்தல் அறிவிப்பில் முக்கியமானதாகும். இதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் எனில், குறைந்தது ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.2.47 லட்சம் கோடி வரை தேவை. இந்த தொகை மிகப்பெரியது. எனவே அரசு இதை எப்படி சமாளிக்கப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

    தமிழக அரசின் பட்ஜெட்

    இதற்கிடையில்தான் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பு வெளியாகுமா? என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்திருக்கினர்.

    Advertisement

    எனவே நிதி நிலைமை குறித்து முதலமைச்சர் விஜய் துறை ரீதியாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று இந்த ஆலோசனை தொடங்கியது. இன்று இரண்டாம் நாளாக ஆலோசனை நடக்க இருக்கிறது. ஜூலை 22 வரை துறை ரீதியாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர், பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும்..

    சாத்தியம் இருக்கிறதா?

    இந்த பட்ஜெட்டில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவதற்கான சாத்திய கூறுகள் எவ்வளவு இருக்கிறது? என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசித்து வருகிறார்.

    ஆலோசனை கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முதலமைச்சருடனான கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Magalir Urimai Thogai: The Tamil Nadu government is set to present its budget soon. The Chief Minister has been holding continuous consultations with departmental officials regarding this. These discussions are entering their second day today, with deliberations focusing on the possibility of announcing a monthly assistance of ₹2,500 for women.