ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக கொடியேற்றும் முதல்வர் விஜய்.. தீவிரமாகும் சுதந்திர தின ஏற்பாடுகள்!

  • சென்னை: நாட்டின் 80வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், முதல்வர் விஜய் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். அதன்பின் பல்வேறு படைகளின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடும் விஜய், சிறப்பு விருதுகளையும் வழங்க இருக்கிறார்.

    Advertisement

    நாட்டின் 80வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பாக செனை புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றப்பட உள்ளது. இந்த விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்று முதல்முறையாக கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Advertisement

    ஏற்கனவே சுதந்திர தின விழாவுக்கான இறுதி அணிவகுப்பு ஒத்திகை ராஜாஜி சாலை இன்று காலை நடைபெற்றது. இதில் குதிரைப்படை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை, மாநில காவல்துறை, கடலோர பாதுகாப்பு படை, சிங்கப்பெண்கள் அதிரடிப் படை, தமிழ்நாடு சிரப்பு காவல் படை, நீலகிரி படைப்பிரிவு, கமாண்டோ படைப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

    நாளை கொடியேற்றிய பின் முதல்வர் விஜய் இவர்களின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சர் நல் ஆளுமை விருது, சமூகப் பணியாளர் விருது ஆகியவற்றை வழங்குகிறார். அதேபோல் சிறந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான விருதினை முதல்வர் வழங்க உள்ளார்.

    Advertisement

    தொடர்ந்து 15 காவல்துறை அதிகாரிகள், சார்நிலை அலுவாலர்களுக்கு சிறப்பு பதக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்த பதக்கங்களை பெறும் 15 காவல் அதிகாரிகளின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் விஜய் நாளை கொடியேற்ற உள்ளதால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    CM Vijay to Hoist National Flag for the first time at Fort St. George on 80th Independence Day 2026