இது பல்டியிலும் அந்தர் பல்டி.. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. உசிலம்பட்டியில் விஜய் போட்ட யூ டர்ன்

  • சென்னை: தமிழக அரசின் முக்கிய திட்டமான 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர்விஜய் மதுரையில் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு அரசு சார்பில் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டத்தின் தொடக்க விழா, கடைசி நேரத்தில் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது.

    Advertisement

    கடைசி நேர இடமாற்றங்கள்

    இந்த விழா முதலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடத்தவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் ஏற்பாட்டுச் சிக்கல்களால் அது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

    Advertisement

    அதன்பிறகு, ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தாய்-சேய் நலப் பிரிவிலேயே முதல்வர் நேரடியாகச் சென்று குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பச்சிளங்குழந்தைகளின் உடல்நலம், தொற்று அபாயம் மற்றும் விஐபி வருகையால் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விழா மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்குக்கு மாற்றப்பட்டது. அங்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு முதல்வர் தங்க மோதிரங்களை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: முக்கிய தகவல்கள்

    யாருக்குக் கிடைக்கும்?: தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த ஒரு கிராம் 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்படும்.

    Advertisement

    பின்னோக்கி அமல்: ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என அரசு அறிவித்துள்ளது.

    நிதி ஒதுக்கீடு: ஆண்டுக்கு சுமார் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

    தொடரும் நிர்வாக 'பல்டிகள்': அண்மைக்கால முக்கிய யு-டர்ன்கள்

    ஒருபுறம் புதிய நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதல்வர் விஜய் தலைமையிலான நிர்வாகம் எடுத்த பல முக்கிய கொள்கை முடிவுகளில் இருந்து அடுத்தடுத்து பின்வாங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது:

    சட்டம் - ஒழுங்கு RTI விலக்கு ரத்து:

    காவல்துறை துப்பாக்கிச் சூடு, காவல் மரணங்கள் மற்றும் கலவரங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்க முடியாது என்று அரசு ரகசிய அரசாணை பிறப்பித்தது. வெளிப்படையான நிர்வாகம் தருவோம் என்று கூறிவிட்டு இப்படிச் செய்வதா என மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கொந்தளித்ததால், அந்த உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது.

    Advertisement

    கல்லூரி மாணவர்கள் போராட்டத் தடை வாபஸ்:

    கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் கூட்டங்களிலோ போராட்டங்களிலோ பங்கேற்கக் கூடாது என உயர்கல்வித்துறை மூலம் கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மாணவர் அமைப்புகளும் ஆசிரியர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த முடிவிலிருந்தும் அரசு பின்வாங்கியது.

    டாஸ்மாக் மற்றும் மதுவிலக்கு தள்ளிவைப்பு:

    பெண்களின் வாக்குகளைக் கவரப் படிப்படியாகப் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று மேடைகளில் முழங்கிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அரசுக்கு வருவாய் தேவை என்பதைக் காரணம் காட்டி டாஸ்மாக் கடைகளைக் குறைக்கும் திட்டத்தைக் கிடப்பில் போட்டது. அதிலும் இப்போது டாஸ்மாக் தனியார்மயம் திட்டமும் போடப்பட்டு வருகிறது.

    Advertisement

    பரந்தூர் விமான நிலைய சர்ச்சை:

    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்படுவதை எதிர்த்து தீவிரமாகப் பேசிய கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டத்தை திடீரென ரத்து செய்து யூ டர்ன் போட்டது.

    பட்டினப்பாக்கம் தலைமை செயலகம்:

    இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 25.55 ஏக்கர் நிலப்பரப்பில், ₹1,200 கோடி செலவில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தலைமைச் செயலகம் அமைந்தால் நகரின் மையத்தில் அனைத்து நிர்வாகமும் ஒரே கூரையின் கீழ் இயங்கும் என்பது அரசின் திட்டமாக இருந்தது.

    Advertisement

    ஆனால், இந்த அரசாணை வெளியான நாள் முதலே பட்டினப்பாக்கம், முள்ளிக்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியும் அச்சமும் உருவானது. சென்னையில் கடல் பகுதியை ஒட்டியுள்ள பட்டினப்பாக்கத்தில் (ஃபோர்ஷோர் எஸ்டேட்) புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், இந்தத் தகவல் இதுவரை அரசால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.. இது முற்றிலும் உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலாகும்.

    English Summary

    CM Vijay to Launch Thai Maman Gold Ring Scheme in Madurai Amid Venue Shift: