அக்டோபர் 13ல் விஜயவாடா செல்லும் விஜய்.. சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன் சந்திப்பு.. பின்னணி!

  • சென்னை: நதிநீர் விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை தமிழக முதல்வர் விஜய் அக்டோபர் 13ஆம் தேதி சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில விஜயவாடாவில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

    Advertisement

    இன்று தொடங்கி அடுத்த 4 நாட்களுக்கு தமிழக முதல்வர் விஜய் பல்வேறு முக்கிய பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கும் முதல்வர் விஜய், மதியம் அவருக்கு விருந்து அளிக்க உள்ளார். விஜய் - ராகுல் காந்தி இடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடக்கவுள்ளது.

    Advertisement

    இதன்பின் நாளை பிரதமர் மோடி மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். பிரதமர் மோடியுடன் விஜய்யும் மெட்ரோ ரயிலில் பயணிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அக்டோபர் 13ஆம் தேதி முதல்வர் விஜய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    விஜயவாடா செல்லும் முதல்வர் விஜய் நதிநீர் விவகாரங்கள் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுடன் பேச உள்ளார். நதிநிஒஇர் இணைப்பு உள்ளிட்டவை தொடர்பாக துணை முதல்வர் பவன் கல்யாணையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. முதல்வர் விஜய்யின் முக்கிய பயணமாக இது பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா சென்று முதல்வர் டிகே சிவக்குமாருடன் பேச விஜய் முயற்சித்தார்.

    Advertisement

    ஆனால் கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் நேரடியாக விஜய்யை வர வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை உருவாகியது. தற்போது திடீரென நதிநீர் இணைப்பு விவகாரம் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க சந்திரபாபு நாயுடு சென்னை வந்திருந்தார். அந்த மாநாட்டிலேயே நதிநீர் இணைப்பு விவகாரம் தொடர்பாக சில பேச்சுகள் நடந்தது. கேரளா தரப்பில் புதிய அணை கட்ட விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    CM Vijay to Meet Andhra CM Chandrababu Naidu and Dy CM Pawan Kalyan in Vijayawada on Oct 13 Over River Water Issue