தொகுதி மறுவரையறைக்கு எதிராக.. சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம்!!

  • சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரையறை தொடர்பாக தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஜோசப் விஜய். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாக பாதிக்கப்படும் எனக் கூறி தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய், இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

    Advertisement

    நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இந்நிலையில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழகத்துக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிக்க தமிழக அரசு சார்பில் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டது.

    சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 57 எம்.பி.க்கள் உள்ள நிலையில், 19 பேர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக, அதிமுக, பாமக, மநீம, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் இக்கூட்டத்தை புறக்கணித்துவிட்டன.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் தலைமையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக எம்.பி.க்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தின் நிறைவாக, முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

    அதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாக பாதுகாக்க, தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து இன்று தமிழக சட்டசபையில் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்துள்ளார். சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று காலை அவை தொடங்கியதும், தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து தனித் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.

    Advertisement

    மகளிருக்கான தொகுதி ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாக பாதிக்கப்படும் எனக் கூறி தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த பேசிய முதல்வர் விஜய், மகளிருக்கான தொகுதி ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையுடன் இணைத்து அதனை ஒத்திவைக்க கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.

    Advertisement

    வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என முதல்வர் விஜய் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    இந்தத் தனித் தீர்மானத்துக்கு திமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாஜக, பாமக, தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகள் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    English Summary

    Chief Minister Joseph Vijay is moving a special resolution in the Tamil Nadu Assembly today regarding constituency delimitation. He is introducing this resolution to oppose the delimitation process, arguing that it would permanently affect Tamil Nadu's parliamentary representation.