மேட்டூர் அணையை திறக்கும் முதல்வர் விஜய்! கிளம்பும் எதிர்ப்பு.. யாருக்கு பலன்? விவரம்!

  • சேலம்: ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த ஆண்டு கர்நாடகா உரிய நேரத்தில் போதுமான நீரை திறக்காததால்.. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், செப்.1ம் தேதி அணையை முதல்வர் விஜய் திறக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியிருக்கின்றன.

    Advertisement

    அணையை திறக்க ஏன் விவசாயிகள் எதிர்க்கிறார்கள்? சிலர் ஏன் ஆதரிக்கிறார்கள்? அணையை திறந்தால் என்ன ஆகும்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    அணையை எப்போது திறக்க வேண்டும்?

    மேட்டூர் அணை கட்டப்பட்டதற்கான நோக்கம் டெல்டாவில் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதால்தான். எனவே டெல்டா விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டுதான் அணை ஒவ்வொரு ஆண்டும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் மொத்த கொள்ளளவு 120 அடி (93.47 டிஎம்சி). குறைந்தபட்சம் அணையில் நீர் மட்டம் 90 அடியை தொட்ட பின்னர் திறந்தால்தான், டெல்டாவின் கடைக்கோடி வரை தண்ணீர் பாயும். எனவே, 90 அடி நீரை உறுதி செய்த பின்னர்தான் அணை ஒவ்வொரு ஆண்டும் திறக்கப்படுகிறது.

    விவசாயிகள் ஏமாற்றம்

    சரி பாசனத்திற்கு 90 அடி நீர் மட்டும் போதுமா? என்று கேட்டால்.. போதாது என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஜூன் 12ம் தேதி அணையை திறக்க வேண்டும். அணைக்கான நீர் வரத்து குறைந்தபட்சம் 8,000 கனஅடியிலிருந்து 12,000 கனஅடிவரை இருக்க வேண்டும். ஏனெனில், குறுவை சாகுபடி என்பது 120 நாட்கள் வரை நடக்கும். இவ்வளவு நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஒருவேளை ஜூன் மாதம் அணை திறக்கப்படவில்லை எனில் விவசாயிகள், குறுவை சாகுபடியை தவிர்த்துவிட்டு சம்பா-தாளடிக்கு போய்விடுவார்கள். எனவேதான் ஜூன் 12ம் தேதி முக்கியம்.

    Advertisement

    ஆனால், அணைக்கான நீர் வரத்து கொஞ்சமாக இருந்து.. 90 அடியை நம்பி மட்டும் தண்ணீர் திறந்தால்.. 40 நாட்களுக்குதான் தண்ணீர் வரும். எனவே விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைவார்கள்.. பெரிய நஷ்டம் ஏற்படும்.

    அணை நிலவரம்

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 89.95 அடியாக இருக்கிறது. அணைக்கு நீர் வரத்து 6,702 கனஅடியாக இருக்கிறது. இதை நம்பி தண்ணீரை திறந்தால்.. குறுவை சாகுபடி செய்ய முடியாது. திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 80% பாசன நிலங்கள் முழுக்க முழுக்க காவிரி நீரை நம்பிதான் இருக்கிறது. 40 நாட்களுக்கு பிறகு தண்ணீர் வரவில்லை எனில்.. வயலுக்கு நீர் பாய்ச்ச ஆழ்த்துளை கிணறு வசதி இந்த மாவட்ட விவசாயிகளிடம் இல்லை. எனவே இப்போது தண்ணீர் திறப்பது நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

    Advertisement

    வரவேற்கும் விவசாயிகள்

    மறுபுறம் தஞ்சை, அரியலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் ஏற்கெனவே ஆழ்துளை கிணறு நீரை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிவிட்டனர். இப்போது பூமிக்கடியில் நீர் குறைய தொடங்கியிருக்கிறது. எனவே அணை திறந்தால்தான் மீதமுள்ள நாட்களுக்கு பயிரை காப்பற்ற முடியும் என்று கூறுகிறார்கள். இப்படியாக செப்.1 அன்று அணை திறப்பதை வரவேற்றிருக்கிறார்கள்.

    சம்பா-தாளடி

    இன்னொரு பக்கம்.. காவிரி நீரை நம்பாமல், பருவமழையை நம்பி மட்டுமே சம்பா-தாளடி நெல் சாகுபடியை விவசாயிகள் தொடங்கிவிடுவார்கள். இந்த ஆண்டு சூப்பர் எல்-நினோ ஆண்டு என்பதால் பவருமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாது. எனவே செப்.1ம் தேதி அணை திறக்கப்படுகிறது எனில் பிப்ரவரி மாதம் வரை தண்ணீர் தேவை. குறைந்தபட்சம் 120-130 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் வேண்டும். தற்போது அணையில் 52.33 டிஎம்சி அளவுக்குதான் தண்ணீர் இருக்கிறது. அணையின் தேவைக்கு 10 டிஎம்சி எப்போது இருப்பு இருக்கும். மீதமுள்ள 40 டிஎம்சி தண்ணீர் எப்படி பிப்ரவரி வரை வரும்? என விவசாயிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    Advertisement

    ஆக இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் அணை திறக்கப்பட வேண்டும் என்றும், அணையை திறப்பதற்கு முன்னர் விவசாய சங்கங்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    English Summary

    CM Vijay: The Mettur Dam is customarily opened every year on June 12. This year, however, Kuruvai cultivation has been affected because Karnataka failed to release sufficient water on time. Against this backdrop, Chief Minister Vijay is set to open the dam on September 1—a move that has sparked both opposition and support.