சென்னை: விஜய் முதலமைச்சராகியுள்ளார். கடவுள் மற்றும் ஜோதிடத்தில் விஜய்க்கு நம்பிக்கை அதிகம். நீட்சபட்ச ராஜயோகத்தால் விஜய் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துள்ளார். தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி 5 வருடங்கள் நீடிக்காது என்று பலரும் கூறுகிறார்கள். ஜோதிட ரீதியாக விஜயின் ஜாதகம் எப்படி இருக்கிறது, அவருக்கு என்ன சிக்கல்கள் ஏற்படும், இந்த ஆட்சி 5 வருடங்கள் நீடிக்குமா, விஜயின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விரிவாக காணலாம்.
விஜய் கடகம் ராசி, பூசம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர். 6 ஆம் இடத்தில் குரு, 3 ஆம் இடத்தில் ராகு, ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், கேது ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. 10ம் இடமான பதவியில் சூரியன் மற்றும் சனி பகவான்களும், 11 ஆம் இடத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் பகவான்கள் உள்ளனர். 9 கிரகங்களில் 7 கிரகங்கள் யோக ஸ்தானத்தில் உள்ளனர்.
இது சுக்கிர திசையில் நடந்துள்ளது. விஜய் சிறப்பான ஆட்சியை வழங்க வாய்ப்புள்ளது. 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எதிர்காலத்தில் விஜய்க்கு சில ஆபத்துகள் உள்ளது. விஜய்க்கு விரய குருவில் ஜென்ம குரு வரப்போகிறது. இதை அவர் தாக்குடிபிடிக்க வேண்டும். அதை தாக்கு பிடித்தால் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு விஜய் ஆட்சிக்கு எந்த சிக்கலும் இருக்காது. திரிகோணத்தில் சுக்கிரன், புதன் இருப்பதால் மக்களுக்கு பயனளிக்கிற திட்டங்களை நிறைவேற்றி பாராட்டுகளை பெறுவார். கல்வி, உணவு, சுகாதாரம் ஆகியவற்றில் அதிகளவு நன்மை கிடைக்கும். திடீரென பல அதிரடி அறிவிப்புகள், நல்ல திட்டங்கள் அறிவிக்கலாம். 10 ஆம் இடத்தில் சூரியன், சனி இருப்பதால் பல அசுர காரியங்கள் ஆகியவற்றை கடந்து அவர் தடம் பதிப்பார். இந்த அமைப்புகளால் தான் சினிமாவிலும் அவர் தடைகளை கடந்து உச்சம் பெற்றார். அதேபோல அரசியலிலும் விஜய் உச்சம் பெற வாய்ப்புள்ளது. எல்லோருடனும் இணக்கமான தந்திரத்தை கடைபிடித்து காரியம் சாதிப்பார். முதலமைச்சரானவுடன் அவர் மற்ற அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தது ஒரு உதாரணம்.ஒரே ஒரு ஆபத்து
தந்திரமான அரசியல்