விஜய் போற இடங்களில் எல்லாம் பிரச்சனை? கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி? லிஸ்ட் போட்ட நெட்டிசன்கள்

  • சென்னை: முதல்வர் விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் அசம்பாவிதம் நடக்கிறது என சமூகவலைதளங்களில் ஒரு கருத்து வைரலாகி வருகிறது. அதிலும் சில சம்பவங்களை குறிப்பிட்டு விஜய்யின் "ராசி" குறித்து நெட்டிசன்கள் பட்டியலிட்டுள்ளதை பார்க்கலாம்.

    Advertisement

    தமிழகத்தில் விஜய் ஆட்சிக்கு வந்தது முதலே விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவை நடந்து வருகின்றன என எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகிறார்கள்.

    Advertisement

    அந்த வகையில் முதல்வர் விஜய் எங்கெல்லாம் ஆய்வுக்கு செல்கிறாரோ அங்கெல்லாம் அசம்பாவிதம் நடைபெறுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

    மருத்துவமனையில் ஆய்வு

    முதல்வராக பொறுப்பேற்றதும் விஜய், கடந்த ஜூலை 8ஆம் தேதி எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமநை மற்றும் தாய்சேய் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பிரசவ வார்டில் பிறந்த குழந்தைகளை தூக்கி கொஞ்சினார்.

    மருந்து தட்டுப்பாடு

    இதையடுத்து செப்டம்பர் மாதம் சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறை மாதத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் உயிரை காக்க பயன்படுத்தப்படும் சர்ஃபாக்டன்ட் என்ற மருந்து தட்டுப்பாடு எழுந்தது.

    Advertisement
    மருத்துவமனைகள் இனி இஷ்டத்துக்கு பில் போட முடியாது.. மருந்து விலைக்கும் கடிவாளம் போடும் அரசு!

    போதை ஒழிப்பு

    கடந்த ஜூன் 25-ஆம் தேதி சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக முதல்வர் விஜய், "Start Run, Stop Drugs" என்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். பொதுமக்களுடன் சேர்ந்து 6 கி.மீ. ஓடி அசத்தினார்.

    இதையடுத்து கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, தமிழகத்தில் ரூ 100 கோடி மதிப்பிலான 137 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை டிஆர்ஐ பறிமுதல் செய்தது. இந்த சம்பவத்தில் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த பூபாலன் உள்ளிட்ட 5 பேரை வருவாய் புலனாய்வு குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

    Advertisement
    நாங்கள் என்ன மெத்தபெட்டமைன் போதைப்பொருளா கடத்தினோம்? கைதான நாதக நிர்வாகி கார்த்திகா கேள்வி!

    புழல் சிறை கைதிகள்

    அது போல் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னை புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அங்கு சிறை கைதிகளுக்கான உணவின் தரம், பாதுகாப்பு ஏற்பாடுகள், அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி புழல் சிறையில் இருந்த நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் போகாது, போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் ஆகியோர் தப்பிய நிலையில் அவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Advertisement
    எபிலெப்ஸி டிராமா.. தேனி சிறை கைதிகள் தப்பிக்க காரணமாக இருந்த அந்த விஷயம்! மாஸ்டர்மைண்ட் யார்?

    மின் கொள்முதல்

    தமிழகத்தில் அடிக்கடி மின் தடை பிரச்சனை எழுந்திருந்த நிலையில் செப்டம்பர் 23 ஆம் தேதி விஜய், அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்திற்கு சென்றார். அங்கு மின்னகம் நுகர்வோர் சேவை மையம் உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    தடையில்லா மின்சாரம்

    தமிழகத்தின் தற்போதைய மின்தேவை, உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் நிலவரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிகரித்து வரும் நிலையில் மின் தேவையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தமிழகத்தில் தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    Advertisement
    18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்!

    மின்னகத்தில் விஜய்

    அவர் மின்னகத்திற்கு போனாலும் போனார், மின் தடை மேலும் அதிகரித்து ஒரு யூனிட் மின்சாரத்தின் கொள்முதல் விலை கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை ரூ 35 ஆக உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இப்படியாக விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் அசம்பாவிதம் நடப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். கடைசியாக அவர் செம்பரம்பாக்கம் ஏரியை நேற்றைய தினம் பார்வையிட்டு, அதன் நீர் மட்டம் குறித்தும் கரைகளின் வலிமை குறித்தும் கரையோர மக்களுக்கான பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Socia media post going viral as unfortunate incidents happed wherever Tamil nadu CM Vijay goes for review. Here is the list!