பட்டு வேட்டியில் பனையூருக்கு வந்த விஜய்.. தவெகவில் இணைந்தவர்களுக்கு பதவி கொடுப்பது பற்றி ஆலோசனை!

  • சென்னை: சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் இன்று வருகை தந்தார். பனையூர் அலுவலகத்திற்கு கோட் சூட் இல்லாமல் பட்டு வேட்டி சட்டையில் வந்துள்ளார் முதல்வர் விஜய். தவெக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    வாரந்தோறும் சனிக்கிழமை வந்தாலே பனையூரில் உள்ள தவெக அலுவலகம் விழாக் கோலம் பூண்டு விடுகிறது. அந்த அளவிற்கு மாற்று கட்சிகளில் இருந்து ஏராளமானோர் சனிக்கிழமைதோறும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 4ஆம் தேதியான இன்று சனிக்கிழமை ஏராளமானோர் தவெகவில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    இன்று பிற்பகல் 3 மணியளவில் பனையூர் தவெக அலுவலகத்திற்கு முதலமைச்சரும், கட்சி தலைவருமான விஜய் நேரில் வந்தார். அங்கு இதுவரை கட்சியில் இணைந்த முக்கியமான தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக அனைவருடனும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். அண்மையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரையும் சந்தித்தார் விஜய்.

    தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். இதுவரை, 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில், இன்று தவெக தலைமை அலுவலகம் வந்த விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு, கட்சியில் இணைந்தவர்களுக்கு இன்னும் கட்சியில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், புதிதாக கட்சியில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டவர்களுக்கு கட்சி பதவிகள் வழங்குவது தொடர்பாக இன்று தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்து, முக்கிய பொறுப்புகளை எதிர்பார்த்து வருகின்றனர்.

    மாவட்டங்களில் கட்சி வேலைகளில் தீவிரமாகப் பணியாற்ற, பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனை விஜய் காதில் போட, அவர் இதுதொடர்பாக இன்று முக்கிய ஆலோசனை நடத்தி இருப்பதாகத் தெரிகிறது.

    English Summary

    TVK leader and Tamil Nadu Chief Minister Vijay visited the party's headquarters in Panaiyur, Chennai, today. He arrived at the office dressed in a silk dhoti and shirt, rather than a suit. Reports indicate that he held key consultations with TVK functionaries.