டபுள் மீனிங், டிரிபிள் மீனிங்! உங்கள் வீட்டு பெண்ணா இருந்தா? உதயநிதியை மறைமுகமாக விஜய் வார்னிங்

  • சென்னை: பெண்கள் குறித்து யாராவது அவதூறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும் என சட்டசபையில் முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார். டபுள் மீனிங்கில் ஆபாசமாக பேசுவதற்கு முன்பு தங்கள் வீட்டு பெண்கள் குறித்து நினைத்து பார்க்க வேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி விவகாரம் குறித்து பேசிய போது நடிகையின் பெயரை திமுக தொண்டர்கள் குறிப்பிட்டதும் இரட்டை அர்த்தத்தில் வரும் ஒரு வார்த்தையை உதயநிதி தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இதையடுத்து உதயநிதி மீது தஞ்சை தவெக பெண் நிர்வாகி புகார் கொடுத்திருந்தார். அதன்படி உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனால் தமிழகமே ஸ்தம்பித்தது. தஞ்சை நோக்கி திமுகவினர் எல்லாம் படையெடுத்தனர். இதையடுத்து உதயநிதி கைதுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து உதயநிதி விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் பதிலுரையில், இந்த சம்பவத்தை குறிப்பிடாமல், "அண்மைக்காலமாக தமிழகத்தில் ஆபாச நதி ஓடிக் கொண்டிருக்கிறது. வன்ம நதி ஓடுகிறது. இந்த நதிகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசுவது, மூன்று அர்த்தத்தில் பேசுவதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள பத்தி டபுள் மீனிங், டிரிபிள் மீனிங்ல பேசுறாங்க.. இனிமே பெண்கள பத்தி அசிங்கமா பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். அப்படி பேசுவதற்கு முன் தங்கள் வீட்டு பெண்களை நினைத்து பார்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    Advertisement

    விஜய் பேசுகையில், எனது பதிலுரையை முடிப்பதற்கு முன், நான் ஒரு சின்ன வேண்டுகோள் இந்த சட்டசபையில் நான் வைக்க வேண்டும் என நினைக்கிறேன். இதுவும் கூட சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்தான். அரசியல் ரீதியாக ஒருத்தருக்கு ஒருத்தர் என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.

    ஆனால் அதே அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் நம்ம மக்களையோ இல்லை, நம் பெண்களையோ தாழ்த்தி தரம் தாழ்ந்து பேசுவது எல்லாம் வேண்டாம் என்பதற்குத்தான் இந்த வேண்டுகோள். அண்மைக்காலமாக நம் தமிழகத்தில் ஒரே ஆபாச நதியா ஓடிக்கிட்டு இருக்கு, வன்ம நதியாக ஓடிக்கிட்டு இருக்கு. நம் வீட்டில் இருக்கிற ஒரு தாயாக, அக்காவாக, தங்கையாக கூடவே இருக்கிறதும் அதே பெண்கள்தான்.

    Advertisement

    அதை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் எல்லோரும் நல்ல முறையில் பேசினால் நன்றாக இருக்கும். எனக்கு திரைத்துறையில் மக்கள் கொடுத்திருக்கும் இடமாக இருந்தாலும் தற்போது கொடுத்திருக்கும் இடமாக இருந்தாலும் அது சாத்தியமானதற்கு காரணம் நம் வீட்டு பெண்கள்தான்.

    அதனால் இந்த பெண்களை யாராவது அசிங்கமாக தரம் தாழ்ந்து பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருந்து இந்த சட்டசபையில் எத்தனை அவமானங்களை தாங்கிக் கொண்டிருந்தார் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற அவமானங்கள் இனி வருங்காலத்தில் எந்த பெண்களுக்கும் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

    Advertisement

    அரசியல் ரீதியாக என்ன வேணாலும் கமென்ட் பண்ணிக்கலாம், ஹார்ஷான கமென்ட்ஸா கூட இருக்கலாம். ஆனால் சட்டசபைக்குள்ளேயே எலும்பை உடைப்பேன் என்கிறார். இந்த பேச்செல்லாம் எதுக்கு, இதுதான் அரசியலா, இப்படியெல்லாம் பேசி பேசிதான் மக்கள் பார்த்து பார்த்து தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். நான் ஒன்றும் திமுகவுக்கு அட்வைஸ் செய்யவில்லை. இதுதான் ரியாலிட்டி" என விஜய் தெரிவித்திருந்தார்.

    English Summary

    CM Joseph Vijay says about DMK talk about women in double meaning, triple meaning..