விஜய் காஸ்டியூமில் தெரிந்த 'V' மாற்றம்.. இதை கவனிச்சீங்களா! முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் கலக்கல்!

  • சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் 'வெற்றி தமிழ்நாடு' முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த முதலமைச்சர் விஜய், தனது கோட் உடையில் 'v' எனும் சிம்பிளை அணிந்து வந்திருந்தது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    நிகழ்ச்சியில், ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த முதலீடு மூலம் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.

    Advertisement

    தமிழ்நாட்டை ஒரு பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்று முந்தைய திமுக அரசின் நோக்கமாக இருந்தது. அதே நோக்கத்தை தற்போதைய தவெக அரசும் முன்னெடுத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது.

    தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளன என்றும், இதன் மூலம் ஒரு தொழில் நிறுவனத்திற்கு 21 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஹிந்துஜா குழுமம், ரூ.2500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இந்த முதலீட்டால் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதேபோல EV வாகனம் - தமிழ்நாட்டுடன் அலட்ராவயோலெட் நிறுவனம் ரூ.779 கோடி முதலீடுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிருஷ்ணகிரியில் அமைகிறது அல்ட்ராவயோலெட் EV ஆலை அமைய உள்ளது. இந்த ஆலை மூலம் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    Advertisement

    அதேபோல டெய்ம்லர் நிறுவனம் ரூ.4000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. காஞ்சிபுரத்தில் இந்த நிறுவனத்தின் ஆலை அமைகிறது.

    • ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ரூ.250 கோடியிலும்
    • லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் ரூ.2500 கோடியிலும்
    • டைட்டன் ஷரூ.1000 கோடியிலும்
    • செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.2000 கோடியிலும்
    • ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் ரூ.5000 கோடியிலும்
    • பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ரூ.1000 கோடியிலும் முதலீடு செய்கிறது.

    இந்த முதலீடுகள் குறித்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "வேலைக்காக யாரும் சொந்த ஊரை விட்டு செல்லக் கூடாது. 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நம்பகமான மாநிலங்களில் முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தவெக ஆட்சியமைத்த முதல் நாளில் இருந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. 100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.1,000 கோடி முதலீடுகளை நாங்கள் ஈர்த்திருக்கிறோம். திறமையும், மனித வளமும் தமிழகத்தில் குவிந்துள்ளது" என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    CM Vijay: The 'Vetri Tamil Nadu' (Victorious Tamil Nadu) investors' conference, where the Tamil Nadu government signed investment agreements, was held today at a private hotel in Guindy, Chennai. Chief Minister Vijay, who attended the event, drew attention by wearing a 'V' symbol on his coat.