13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி

  • சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்துள்ளனர். சில விஷயங்கள் வரவேற்பையும், சில விஷயங்கள் சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன. அதிகாரிகள் நியமனத்தில் தவெக சிறப்பாக செயல்படுவதாக பலரும் பாராட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், 13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள் பணியில் உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    ஆட்சி மாற்றம் வந்தவுடன் முதலில் நிகழ்வது அதிகாரிகள் மாற்றம் தான். தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்த பிறகு தலைமைச் செயலகம், மாவட்டங்களில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பு அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்தந்த கட்சிக்கு விசுவாசமான அதிகாரிகளை நியமிப்பது திராவிட கட்சிகளின் வழக்கம். தவெக புதிதாக ஆட்சியமைத்துள்ளதால் அதிகாரிகளை எப்படி நியமிப்பார்கள் என்கிற விமர்சனம் எழுந்தது. ஆனால் தவெக அதில் ஸ்கோர் செய்துள்ளது.

    Advertisement

    13 பெண் கலெக்டர்கள்

    தமிழகத்தில் சென்னை மாவட்ட கலெக்டராக மாலதி ஹெலன், அரியலூர் மாவட்ட கலெக்டராக மிருணாலினி, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக பத்மஜா, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக சினேகா, பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக சரண்யா அரி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக அருணா, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பிரியா ரவிச்சந்திரன், சிவகங்கை மாவட்ட கலெக்டராக பொற்கொடி, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக ரேவதி, நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக கவிதா, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக வந்தனா கார்க், வேலூர் மாவட்ட கலெக்டராக லீலா அலெக்ஸ் ஆகியோர் உள்ளனர்.

    Advertisement

    இதன் மூலம் தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் பெண் கலெக்டராக உள்ளனர். இதில் கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட பெண் கலெக்டர்களும் உள்ளனர். தவெக ஆட்சியில் தமிழகம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளனர். இதன் மூலம் மேலும் சில மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள் நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

    திமுக பாணியில் தவெக

    தவெகவில் வெற்ற பெற்ற 13 எம்எல்ஏக்களில் 4 பேரை அமைச்சராக நியமித்துள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறை பெண் அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிகாரிகள் நியமனத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கியமாக பெண்கள், பெண் அதிகாரிகளிடமும் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம், பாதுகாப்பு வழங்கி முதலமைச்சர் விஜய் புதிய அத்தியாயம் படைக்க வேண்டுமென தவெகவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    திமுக ஆட்சியிலும் பெண் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வெல்லும் தமிழ் பெண்கள் என்கிற பெயரில் பெண் அதிகாரிகளை மேடையேற்றி திமுக அரசு கௌரவித்தது. அதேபோல தவெக ஆட்சியிலும் பெண் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Cm Vjay: 13 District officials are women in TVK Government. Cm Vjay with different vision on building the administration.