சென்னை: கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை கோரி டெண்டர் அறிவித்திருக்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.
கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ என்பது தென் சென்னை மற்றும் சென்னை புறநகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதை ஏற்கும் விதமாக தற்போது டெண்டர் கோரப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது.
சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை திட்டமிடப்பட்டிருக்கும் வழித்தடத்தின் நீட்சியாக.. இது கிளாம்பாக்கம் டூ செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த பாதை டபுள்டக்கர் பாதையாக அமைய இருக்கிறது என்பதுான் இதன் சிறப்பு. அதாவது, கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு இடையே நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டிருக்கும் 6 வழி உயர்மட்ட மேம்பால சாலையுடன் இந்த மெட்ரோ பாதையும் அமைய உள்ளது. இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை, திட்டத்திற்கான தோராயமான நிதி, ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் அது அமைய உள்ள இடத்தில் இருக்கும் மண்ணின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்படும். முன்னதாக விமான நிலையம்-கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரையிலான 15.5 கி.மீ மெட்ரோ நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.சாத்தியக்கூறு அறிக்கையின் நோக்கம்