தமிழகத்திலும் கரப்பான் பூச்சி ஜனதா போராட்டம்.. சென்னையில் நள்ளிரவில் திரண்ட இளைஞர்கள்

  • சென்னை: நீட் முறைகேடுகள் தொடர்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவில் சென்னையிலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் போராட்டம் நடத்தினர்.

    Advertisement

    நீட் முறைகேடு, சிபிஎஸ்இ தேர்வு குளறுபடி உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற இளைஞர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.

    Advertisement

    சென்னையில் போராட்டம்

    டெல்லியில் நடைபெற்ற இந்த போரட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறியதாவது:- கல்வி என்பது தகுதியை வளர்ப்பதற்கான ஒரு கருவி. ஆனால், தகுதியிருந்தால்தான் கல்லூரிக்குள் நுழைய முடியும். எம்பிபிஎஸ் ஆக முடியும் என்று சொல்வது மாணவர்கள் மீது நிகழ்த்தப்படக்கூடிய வன்முறை.

    துப்பாக்கி முனையில் கைது செய்தனர்

    நீட் தேர்வில் முறைகேடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் முறைகேடு நடைபெறுகிறது. 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த போது, சென்னையை சேர்ந்த மாணவருக்கு ஹைதாராபாத்திலும் விஜயவாடாவிலும் தேர்வு மையம் போட்டு இருந்தார்கள். அதற்கு எதிராக மாணவர்கள் ஆகிய நாங்கள் கோரிக்கை வைத்தோம். போராடினோம். அதன்பிறகு அது மாற்றப்பட்டது.

    Advertisement

    பாஜக அரசு திட்டமிட்டு மாணவர்கள் மீது முறைகேடு செய்து அதன் மூலம் லஞ்சம், பெருமளவு முறைகேடு, கையாடல் செய்கிறது. இதை ஒருபோதும் மாணவர்கள் ஆகிய நாங்கள் சிஜேபி ஆகிய நாங்கள் ஏற்க மட்டோம். சிஜேபி கட்சியினர் மானவர்கள் டெல்லியில் 23 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் செய்தோம். டெல்லியில் அமைதியாக போராடிய மாணவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்து இருக்கிறது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியிருக்கிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

    திருடவா வந்து இருக்கிறோம்

    ஜனநாயக முறையில் பெர்மிஷன் கேட்டு போராட்டத்திற்கு போகிறோம். நாங்கள் 50 பேர் கூடுகிறோம். ஆனால் போலீசார் 500 பேரை திரட்டிக்கொண்டு எங்களை அச்சுறுத்துற மாதிரி வருகிறார்கள். நாங்கள் என்ன திருடவா வந்து இருக்கிறோம். கஞ்சா விற்கிறார்கள், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கிறது.. இதை தட்டி கேக்க வக்கில்லாத காவல்துறை போராடி நியாயம் கேட்கிற எங்களை அச்சுறுத்துகிற மாதிரி பேரிகார்டில் இரும்பு கம்பிகளை சுத்தி வைத்து இருக்கிறார்கள்.

    Advertisement

    லத்தியோடு நிற்கிறார்கள். இதை பார்க்கும் போது புது மாணவர்களுக்கு பயம் ஏற்பட்டது. இந்த போராட்டம் என்பது முழுக்க முழுக்க கரப்பான் பூச்சி ஜனதா, இளைஞர்கள், மாணவர்கள் நடத்தும் போராட்டம்தான். எங்கள் கோரிக்கை நியாயமான கோரிக்கை" என்றனர்.

    English Summary

    Cockroach Janata protest in Chennai: ongoing protests demanding Dharmendra Pradhan's resignation over NEET irregularities, members of the 'Cockroach Party' launched a protest in Chennai last night as well; they staged a demonstration at the headquarters of the Communist Party of India at midnight.