கோவை நூலக மோசடி: விஜய் பெயரில் எப்படி திடீரென இவ்வளவு எழுத்தாளர்கள் முளைத்தார்கள்? பெ சண்முகம்

  • சென்னை: கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் அறிவு மோசடி நடந்துள்ளது. விஜய் என்ற பெயரில் திடீரென எப்படி இவ்வளவு எழுத்தாளர்கள் முளைத்தார்கள் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். எந்த ஆட்சியில் முறைகேடுகள், மோசடிகள் நடந்திருந்தாலும், யாராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

    Advertisement

    கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகம் என்ற நூலகத்தில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி புத்தகங்களை பல மடங்கு அதிக விலைக்கு வாங்கி பெரிய மோசடி நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறியுள்ளார். தமிழகம் முழுக்க நேற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் என சிபிஎம் பெ சண்முகம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் அறிவு மோசடி நடந்துள்ளது. நூல்களோடு குப்பைகளையும் சேர்த்து வைத்தது பெரிய மோசடி. விஜய் என்ற பெயரில் திடீரென எப்படி இவ்வளவு எழுத்தாளர்கள் முளைத்தார்கள் என்று தெரியவில்லை. நூலகத்தில் நூல்களை தான் வைக்க வேண்டும், குப்பைகளை இல்லை. இந்த குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. பெரியார் பேரைச் சொல்லி ஏமாத்திட்டாங்களே! வேதனையுடன் பேசிய செங்கோட்டையன்!

    இந்த மோசடியை வெளியில் கொண்டு வந்த எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். எந்த ஆட்சியில் முறைகேடுகள், மோசடிகள் நடந்திருந்தாலும், யாராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும். இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். திடீரென எழுத்தாளர்கள் முளைத்துள்ளனர்.

    Advertisement

    வழக்கமான காவல்துறை விசாரணை மூலமாக எந்த உண்மையையும் கொண்டு வர முடியாது என்பதால் தான் நாங்கள் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என கூறுகிறோம். அதுமட்டுமின்றி இருக்கக்கூடிய நூல்களை முதலில் அங்கிருந்து முதலில் அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு தமிழ் அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து தவறான ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நூல்களை நூலகத்தில் இருந்து அகற்ற வேண்டும்.. என்றார்.

    English Summary

    Coimbatore library scam: An act of intellectual fraud has taken place at the Periyar Arivulaga Library in Coimbatore. It is unclear how so many individuals, all bearing the name 'Vijay', suddenly appeared. A Special Investigation Team (SIT) must be constituted to probe this matter. Regardless of which administration was in power when these irregularities and frauds occurred, or who the individuals involved might be, strict action must be taken, stated CPM State Secretary Pe. Shanmugam.