கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவர் படுகொலை.. கல்லறை மீது கிடந்த சடலம்.. பெரும் ஷாக்!

  • சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கல்லறை மீது ரத்த வெள்ளத்தில் கிடந்த கல்லூரி மாணவர் ரஞ்சன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சாணாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் மஞ்சு ஆகியோரின் மூத்த மகன் ரஞ்சன் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு சம்பவம் ஒன்றில் ஈடுபட்டு பின்னர் கவுன்சிலிங் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    இதற்கிடையே, மாணவர் ரஞ்சனுக்கும் சில நபர்களுக்கும் இடையை மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் அடிக்கடி செல்போன் காலில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று இரவு நண்பர்கள் சிலர் அவரை வெளியில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ரஞ்சன் உடல், அவரது வீட்டின் அருகே இடுகாட்டில் உள்ள கல்லறை சமாதி மீது தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடைத்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த போலீசார், ரஞ்சன் உடலைக் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    முன் விரோதம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பாதிரிவேடு போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 17 வயது மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Pachaiyappa's College student has been hacked to death near Gummidipoondi in Tiruvallur district. The body of the student, Ranjan, was recovered lying in a pool of blood atop a grave.