பொகோட்டா: கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியிருக்கின்றன.
கொலம்பியாவின் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 7.4 ஆக பதிவாகியிருக்கிறது. கொலம்பியாவின் மேற்கு பகுதியில் உள்ள சோகோ மாகாணத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதிக்கு அருகே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. கலி, பெரேரா மற்றும் மனிசாலேஸ் போன்ற நகரங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்திருக்கின்றன. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் பொகோட்டா உட்பட நாடு முழுவதும் உணரப்பட்டன. பக்கத்து நாடுகளான வெனிசுலா, ஈக்வடார் மற்றும் பனாமா எல்லை பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டிருக்கிறது. இதில் ஒரே நல்ல விஷயம் நிலநடுக்கம் காரணமாக பசிபிக் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுதான். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. தீயணைப்பு, பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலநடுக்கம் கொலம்பிய வரலாற்றில், சமீபத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக பார்க்கப்படுகிறது. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் தனது கவலையை தெரிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரமாக மீண்டுவர வேண்டும் என்றும் அமீரகம் கூறியிருக்கிறது. எல்.சால்வடார், ஈக்வடார், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் மீட்பு குழுக்கள், மருத்துவ உதவிகள் மற்றும் உபகரணங்களை வங்கி உதவ முன் வந்திருக்கின்றன.உதவ முன் வந்த உலக நாடுகள்