வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.183.50 வரை குறைவு.. அதிகாலையிலேயே வந்த குட்நியூஸ்!

  • சென்னை: வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை இன்று அதிரடியாக குறைந்தது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் ரூ.183 வரையும், சென்னையில் 173.50 வரை சரிந்தது. இதன்மூலம் சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.3,106 ஆக சரிந்தது.

    Advertisement

    ஈரான் போர் காரணமாக நம் நாட்டில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வணிக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதேவேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    Advertisement

    தற்போது ஈரான் போர் முடிவடைந்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. மேலும் இனி தொடர்ந்து சிலிண்டர் விலை சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அதன்படி இன்று அதிகாலையிலேயே வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.183.50 குறைந்தது. இதன்மூலம் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.3,113.50ல் இருந்து ரூ.2,930 ஆக குறைந்தது. மும்பையில் ரூ.197 வரை குறைந்து ரூ.3,081ல் இருந்து ரூ.2,884 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.174 வரை சரிந்து ரூ.3,255.50ல் இருந்து ரூ.3,081.50 ஆகவும் சரிந்தது.

    Advertisement

    தமிழ்நாட்டில் சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.173.50 வரை சரிந்து ரூ.3,283க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை இன்று ரூ.3,109.50 க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் வைத்திருப்பவர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. குறிப்பாக ஈரான் மீதான போர் நடவடிக்கையால் கத்தார் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து நம் நாட்டுக்கு கேஸ் கிடைப்பதில் சிக்கல் நிலவியது. இதனால் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

    Advertisement

    முன்னதாக கடந்த மார்ச் மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.144ம், ஏப்ரலில் ரூ.195.50ம், மே மாதம் ரூ.993ம் அதிகரித்தது. அதன்பிறகு ஜுன் மாதம் ரூ.42 வரை உயர்ந்தது. இந்நிலையில் தான் தற்போது இந்த ஆண்டில் முதல் முறையாக குறைந்துள்ளது. இருப்பினும் இன்றைய தினம் வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    English Summary

    Commercial LPG cylinder prices in India have been reduced by Rs.183.50 per 19-kg cylinder today following commercial cylinder price down from Rs.3,283 to Rs.3,109.50.