எங்களுக்கு எண்டே கிடையாது.. தேர்தல் தோல்வி குறித்து சிபிஎம் சண்முகம் ஓபன் டாக்!

  • சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) இரண்டும் படுதோல்வியடைந்தன. இந்நிலையில் இந்த தோல்வி குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    Advertisement

    கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் வெற்றிப்பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள், அடுத்த கொஞ்ச நாட்களிலேயே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். எனவே இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    இவர்கள் ராஜினாமா செய்யாமலேயே தவெகவுக்கு ஆதரவளித்திருக்கலாம். இவர்கள் ஆதரவு கொடுத்துதான் தவெகவை காப்பாற்ற வேண்டும் என்று கிடையாது. எனவே மொத்தத்தில் இந்த இடைத்தேர்தல் தேவையில்லாத ஆணி என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்திருந்தன. ஒருவேளை இந்த தேர்தலில் போட்டியிடாவிட்டால் தவெகவின் தவறுக்கு துணை போய்விட்டோம் என்று அர்த்தமாகிவிடும் என.. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன.

    தாராபுரத்தில் CPI சார்பில் லஷ்மணன், மதுராந்தகத்தில் CPM சார்பில் சுகந்தி களமிறக்கப்பட்டனர். பிரச்சாரத்தில் தவெக மீது சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மதுராந்தகத்தில் பணம் எக்கச்சக்கமாக விளையாடுகிறது.. குறிப்பாக தவெக சார்பில் அதிக அளவில் பணம் விநியோகிக்கப்படுகிறது என்றும் விமர்சித்திருந்தார். இது எதிர்க்கட்சிகளுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்தது. இப்படியாக தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகின.

    Advertisement

    2 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் படுதோல்வியடைந்தன. தாராபுரத்தில் மொத்தமாக 1157 வாக்குகளையும், மதுராந்தகத்தில் 1986 வாக்குகளையும் பெற்றிருந்தன. இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரிய அளவில் வெற்றிப்பெறாது என்று சொல்லப்பட்டிருந்தாலும், இவ்வளவு குறைவான வாக்குகளை வாங்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த தோல்வி குறித்து பலரும் விமர்சிக்க தொடங்கினர். வெறும் ஆயிரம் வாக்குகளை வைத்துக்கொண்டுதான் தவெக அரசுக்கு எதிராக அறிக்கை விடுக்கிறதா? என்றும் கேள்வியை பலரும் எழுப்பினர்.

    இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பெ.சண்முகம் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இடைத்தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான வெறுப்பு, எதிர்ப்பு, ஒவ்வாமை, நட்பு, நலன் என பல விதங்களிலும் கருத்துக்களும், அறிவுரைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.

    Advertisement

    ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்போம்.

    கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம். கம்யூனிசத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை. அழிக்கவும் முடியாது" என்று பதிவிட்டிருக்கிறார்.

    English Summary

    Communist Party: Both the Communist Party of India (CPI) and the Communist Party of India (Marxist) (CPM) suffered a crushing defeat in the recently concluded by-election in Tamil Nadu. Amidst this, CPM State Secretary P. Shanmugam has posted about the defeat on his X (formerly Twitter) page.