தவெக வேட்பாளர்களுக்கு சிக்கல்? விதிகளை மீறி பல கோடி செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார்

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறி பல கோடி ரூபாய் செலவு செய்ததாக தவெக வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் ரோடு ஷோவுக்காக பல கி.மீ. தூரத்திற்கு பேரி கார்டுகள் அமைத்த செலவுகளை தேர்தல் செலவுகளில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலூரை சேர்ந்தவரும், உயர் நீதிமன்றம் வழக்கறிஞருமான அமரர் தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் தேர்தல் விதிகளை மீறி பல கோடி ரூபாய் செலவு செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    Advertisement

    80 கிமீ தூரம்

    தமிழகத்தில் நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் விஜய் தவெக வேட்பாளர்கள் சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேலை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஒரு தொகுதிக்கு இரண்டு நாட்கள் என மொத்தம் 4 முறை சென்று விஜய் பிரசாரம் செய்தார். இதில் முதல்வர் விஜய் வந்த 4 நாட்களில் மட்டும் அந்த பகுதிகளில் சுமார் 80 கிமீ தூரத்துக்கு இருபுறமும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.

    சாலைகளின் இருபுறமும் இரும்பு தடுப்பு கம்பிகள், உயர கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதுமட்டுமில்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்து லாரி, வேன்களில் ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. பேரி கார்டுக்கு தேர்தல் ஆணையம் 180 ரூபாய் என விதிக்கப்பட்டிருந்த நிலையில் மொத்தமாக பார்க்கும் போது இரு தொகுதி தவெக வேட்பாளர்களும் பேரி கார்டு வைப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.

    Advertisement

    பல கோடி ரூபாய் செலவு

    இதுமட்டுமின்றி வரவேற்பு, தாரை தப்பட்டை, மேளம் என பல கோடி ரூபாய் செலவு செய்துவிட்டு அதனை தேர்தல் செலவுகளில் சேர்க்காமல் உள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தெரிவிக்கவில்லை. இந்திய தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் 40 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என நிர்ணயித்துள்ள நிலையில் இவர்கள் இந்த இரு நாட்களில் மட்டுமே பல கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து இருக்கிறார்கள்.

    இது இந்திய தேர்தல் ஆணைய விதிக்கு முரணானது. எனவே தேர்தல் ஆணையம், தங்கள் வசம் உள்ள வீடியோ பதிவுகளை வீடியோ டீம் குழுக்களை அமைத்து அதனை முழுமையாக ஆய்வு செய்து அதில் அவர்கள் செய்துள்ள செலவுகளை தேர்தல் செலவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்த்தால் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு தொகை அதிகமாக வருகின்றது.

    Advertisement

    எனவே தேர்தல் ஆணைய விதிகளின் படி தவெக வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க கோரி தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    English Summary

    TVK candidates: A complaint has been filed with the Election Commission against the TVK candidates for the Maduranthakam and Dharapuram constituencies. The complaint seeks action against these candidates for allegedly spending several crore rupees in violation of election rules. It also urges that the expenses incurred for erecting barricades over a distance of several kilometers for leader Vijay's roadshow be included in the official election expenditure.