முதல்வர் விஜய் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய இவ்வளவு சிக்கலா? தலைமைச் செயலக சங்கம் சொன்ன விஷயம்

  • சென்னை:சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு, முதல்வர் விஜய்யின் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இதனை வரவேற்றுள்ள தலைமை செயலக சங்கம், 9-வது தளத்திலும் இயங்கும் வணிகவரி, பதிவு, அறநிலையங்கள் மற்றும் உள் துறை பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில் உள்ள சிக்கல்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தனித்து போட்டியிட விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்றது. இதில் விசிக, முஸ்லீம் லீக், இடதுசாரிகள் மற்றும் அதிமுகவில் கணிசமானோரின் ஆதரவுடன் முதல்வர் விஜய் ஆட்சியமைத்துள்ளார். கடந்த மே 10-ம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அடுத்த சில வாரங்களில் அமைச்சர்களுக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டது. விஜய் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டரை மாதத்தில் பல்வேறு மாற்றங்கள் தலைமை செயலகத்தில் நடந்து வருகின்றன. தலை​மைச் செயல​கத்​தில் உள்ள முதல்​வர் அலு​வல​கம் தற்​போது இடமாற்​றம் செய்​யப்படுகிறது.

    Advertisement

    தலை​மைச் செயலக வளாகத்​தில் 2 கட்​டிடங்​கள் உள்​ளன. பிர​தான புனித செயின்ட் ஜார்ஜ் கோட்​டை​யில் உள்ள 3 தளங்​களில் முதல்​வர், அமைச்​சர்​களின் அலு​வல​கங்​கள் செயல்பட்டு வருகின்றன.. மற்​றொரு கட்​டிடம் 10 அடுக்​கு​கள் கொண்ட நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யாகும். இதில் துறை செயலர்​களின் அலு​வல​கங்​கள் செயல்​பட்டு வருகின்றன,

    இதற்​கிடையே செயின்ட் ஜார்ஜ் கோட்​டை​யில் இடப்​பற்​றாக்​குறை இருக்கிறது. வாகன நிறுத்​து​மிட வசதி குறை​பாடு மற்​றும் புதிய கட்​டிடங்​களை அமைப்​ப​தற்​கான கட்​டுப்​பாடு​கள் உள்ளது. இதன் காரணமாக முதல்​வர் அலு​வல​கத்தை நாமக்​கல் கவிஞர் மாளி​கைக்கு மாற்ற விஜய் முடிவு செய்தார். அதேபோல் முதல்​வர் அலு​வல​கத்தை மாற்ற வேண்​டுமென ஜோதிட ரீதி​யாக​வும் விஜய்க்கு ஆலோ​சனை​கள் வழங்​கப்​பட்​ட​தாக சொல்லப்படுகிறது.. அதன்​படி, நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யில் 10-வது தளத்​தில் முதல்​வர் அலு​வல​கம் மாற்​றப்படுகிறது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

    Advertisement

    இந்த சூழலில் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தலைவர் வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற உள்ளது. இதை எங்கள் சங்கம் வரவேற்கிறது. இதனால் அந்த தளத்திலும், 9-வது தளத்திலும் இயங்கும் வணிகவரி, பதிவு, அறநிலையங்கள் மற்றும் உள் துறை பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில் உள்ள சிக்கல்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

    கூட்ட அரங்குகள் மற்றும் உணவறைகளில் துறைகளை இடமாற்றம் செய்வது, கோப்புகளை பராமரிக்கவும் பணியாளர்கள் பணியாற்றவும் போதிய இடவசதி கிடைக்காமல் பாதிப்பை ஏற்படுத்தும். நவீனமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே பணியாளர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். முக்கியமாக, ஆகஸ்டு 5-ந்தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை பணிகளை இந்த இடமாற்றம் வெகுவாகப் பாதிக்கும்.

    Advertisement

    எனவே, இடமாற்றம் செய்யப்படும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பான அலுவலக இடங்களை ஒதுக்கி, அரசுப்பணிகள் தடையின்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் தலைமை செயலக ஊழியர்கள் கூறும் போது, உள்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறையின் பணியாளர் களையும், அத்துறைக்கு உட்பட்ட கோப்புகளையும், பதிவேடுகளையும், முதல்வர் அலுவலகத்திற்கு ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்வதற்கு போதுமான இடவசதி இல்லை என்றும், செய்தித்துறை தலைமை செயலகத்தில் தான் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்கள்.

    தலைமை செயலக பிரதான கட்டடத்தில் ஏதேனும் பெரும் தீவிபத்து ஏற்பட்டால், உள்துறையின் சில பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்கள், அந்த விபத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள எந்தவித வாய்ப்பும் இல்லாத நிலையில் பணியாற்றி வருவதாகவும் ஆதங்கம் தெரிவித்தனர். மேலும்
    இடமாற்றத்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவாதிப்பதற்கும், மாற்று வழிகளை மேற்கொள்வதற்கும் சங்க நிர்வாகிகளை அழைத்து, பொதுத் துறை அதிகாரிகள் பேசவில்லை என்றும் அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Is relocating Chief Minister Vijay's office such a complicated affair? Here is what the Secretariat Association had to say.