லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்‌ஷனுக்கு தயாராகும் காங்.,!

  • சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியில், தோல்விக்கான காரணங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேர்தல் நிதி முறையாக செலவிடப்படவில்லை, கட்சி நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டனர், வேட்பாளர்களே தனித்துப் பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என பல்வேறு குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் மேலிடம் அமைத்துள்ள உண்மை கண்டறியும் குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், 28 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி முடியாததால், கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவியது.

    Advertisement

    இந்த நிலையில் தோல்விக்கான காரணங்களை கண்டறிய டெல்லி காங்கிரஸ் மேலிடம் சார்பில் ஐவர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் முன்னாள் எம்.பி. ஜெயகுமார், மாநில நிர்வாகிகள் சொர்ணா சேதுராமன், எஸ்.எம். இதயதுல்லா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ்

    முதலில் அனைத்து 234 தொகுதிகளிலும் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு தோல்வியடைந்த 23 தொகுதிகளில் மட்டும் நேரடி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வேளச்சேரி, சோளிங்கர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பென்னாகரம் உள்ளிட்ட பல தொகுதிகளில் குழுவினர் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தேர்தல் பணியாற்றியவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்துள்ளனர்.

    Advertisement

    காங்கிரஸ் தோல்வி

    இதுவரை ஆறு தொகுதிகளில் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகளிலும் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் பல்வேறு அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்தலுக்காக மேலிடம் வழங்கிய நிதியின் ஒரு பகுதி மட்டுமே களத்தில் செலவிடப்பட்டதாகவும், மீதமுள்ள தொகை பயன்படுத்தப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டதாகவும் சில நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் நிதி

    அதேபோல், தேர்தல் பிரச்சாரத்தின் போது மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொகுதி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் அடிப்படை கட்டமைப்பில் உள்ள தொண்டர்களை வேட்பாளர்கள் முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகளை புறக்கணித்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளை மட்டுமே நம்பி தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    உண்மை கண்டறியும் குழு

    பல இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் கட்சியினருடன் ஆலோசனை நடத்தாமல், தனிப்பட்ட அணுகுமுறையிலேயே தேர்தலை எதிர்கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தல் களத்தில் முழுமையான ஈடுபாட்டை காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. கட்சியின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்தாமல், கூட்டணி கட்சிகளின் ஆதரவை மட்டுமே நம்பியதே தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டெல்லி மேலிடம்

    குறிப்பாக சில தொகுதிகளில் வேட்பாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தேர்தல் பணிகளை பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, மீதமுள்ள 17 தொகுதிகளிலும் விசாரணையை முடித்த பின்னர் விரிவான அறிக்கையை டெல்லி காங்கிரஸ் மேலிடத்திடம் உண்மை கண்டறியும் குழு சமர்ப்பிக்க உள்ளது.

    Advertisement

    ராகுல் காந்தி

    அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக காங்கிரஸில் நிர்வாக மாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் அல்லது அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு கட்சி வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. தேர்தல் தோல்விக்கு வெளிப்புற காரணங்களை விட கட்சிக்குள் ஏற்பட்ட ஒருங்கிணைப்பு குறைபாடுகள், தேர்தல் நிதி பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதே முக்கிய காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிரடி ஆக்சனுக்கு தயாராகி வருகிறாராம் ராகுல் காந்தி.

    English Summary

    Congress fact-finding panel hears complaints of fund misuse and internal coordination failures after Tamil Nadu Assembly election defeat.