25 ஆண்டுக்கு பின் பணம் கொடுக்காத தேர்தல்!” தவெக வெற்றி.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன மாணிக்கம் தாகூர்

  • சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வென்ற நிலையில், அதற்கு காங்கிரஸ் எம்பியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் ஆட்சிக்கு ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாக இதை கருத வேண்டும் என்ற அவர், தமிழ்நாட்டில் 25 ஆண்டுக்களுக்கு பிறகு ஒரு இடைத் தேர்தலுக்கு பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் கடந்த பொது தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் மற்றும் பி.சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால், அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது..

    Advertisement

    இடைத்தேர்தல்

    கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடநந்த நிலையில் அப்போது 85.99% வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்கு முந்தைய சட்டமன்றப் பொதுத் தேர்தலில் இத்தொகுதியின் வாக்குப்பதிவு 93.22% ஆக பதிவாகியிருந்தது. அதேபோல தாராபுரம் தொகுதியில் மொத்தமாக 80% வாக்குகள் பதிவாகி இருந்தது. சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் 89.89% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு தொகுதிகளிலும் கடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் சற்று குறைந்துள்ளது.

    தவெக வெற்றி

    இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.. வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் செய்யப்பட்டு இருந்தது. இரு தொகுதிகளிலுமே தொடக்கம் முதலே தவெக வேட்பாளர்களே முன்னிலை வகித்தனர். இடையில் சில சுற்றுகள் மட்டும் தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்த போதும் அந்த டிரெண்ட் மாறியது. பிறகு கடைசி வரை தவெக வேட்பாளர்களே முன்னிலை வகித்து வெற்றி வாகை சூடினர்.

    Advertisement

    இரண்டாவது இடத்திற்கு தான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளுமே மாறி மாறி 2ம் இடத்திற்கு வந்தன. இறுதியில் திமுக இரு தொகுதிகளிலும் 2வது இடம் பிடித்த நிலையில், அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டன. இதற்கிடையே தவெக வெற்றிக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மோடி – அமித்ஷாவின் பொம்மை.. ஞானேஷ்குமாரை குறிவைத்து மாணிக்கம் தாகூர் சரமாரி தாக்கு

    மாணிக்கம் தாகூர்

    இது தொடர்பாக காங்கிரஸ் எம்பியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டரில், "மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் மக்களின் பேராதரவோடு அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    Advertisement

    கடந்த 4 மாதங்களாக மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாக இதை கருத வேண்டும். த.வெ.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க., அ.தி.மு.க. கட்டவிழ்த்துவிட்ட அவதூறு பிரச்சாரங்களை மக்கள் புறக்கணித்து த.வெ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்த இடைத் தேர்தல் வெற்றி என்பது முதலமைச்சர் தலைமையிலான அரசுக்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

    25 ஆண்டுகள்

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த இரண்டு தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவை தமிழக மக்களின் பிரதிபலிப்பாக கருத வேண்டும். தமிழ்நாட்டில் 25 ஆண்டுக்களுக்கு பிறகு ஒரு இடைத் தேர்தலுக்கு பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி, இடைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Congress MP Manickam Tagore has congratulated TVK candidates Maragatham Kumaravel and P. Sathyabama on their victories(விஜய்க்கு மாணிக்கம் தாக்கூர் வாழ்த்து): Manickam Tagore Congratulates CM Vijay latest news in tamil.