உதயநிதியால் இந்த ஒரு தோல்வியையே தாங்க முடியலையா? ராகுல் மீது ஏன் வன்மம்? மாணிக்கம் தாகூர் கேள்வி


  • சென்னை: தானே மண் அள்ளி போட்டுக் கொண்ட ராகுல் என்ற தலைப்பில் முரசொலியில் வெளியான தலையங்கத்திற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல். காங்கிரஸ் கட்சியை ஆழக்குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை ராகுல் செய்து வருகிறார். இதுதான் மற்ற மாநிலங்களிலும் நடந்தது, தமிழகத்திலும் நடக்கிறது என முரசொலி நாளிதழில் விமர்சனம் வெளியானது.

    Advertisement

    இதற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: முரசொலி கட்டுரையை படித்த பிறகு ஒரு கேள்விதான் எழுகிறது.

    2026 தேர்தலில் 131 இடங்களில் இருந்த திமுகவை மக்கள் 59 இடங்களுக்கு குறைத்தது ஏன் என்பதை பற்றி திமுக தலைமை சிந்தித்ததா?

    மக்கள் ஏன் திமுகவை நிராகரித்தார்கள் என்பதை ஆராய்வதற்கு பதிலாக, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் தாக்குவது தோல்வியை மறைக்கும் முயற்சியாக மட்டுமே தெரிகிறது.

    தி.மு.க. பல தேர்தல் தோல்விகளை கடந்த காலத்தில் சந்தித்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கலைஞர் இருந்தார். தோல்வியை அரசியல் முதிர்ச்சியுடனும் சாதுர்யத்துடனும் ஏற்றுக்கொண்டு, காரணங்களை ஆராய்ந்து மீண்டு வந்தார். ஆனால் இன்றைய திமுக உதயநிதி தலைமையால் இந்த ஒரு தோல்வியைக் கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியவில்லை.

    Advertisement

    மாறாக, கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகள் மீதும், குறிப்பாக காங்கிரஸ் மீதும் விஷ வார்த்தைகளை கக்கி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, பாஜகவிடம் தங்களின் காங்கிரஸ் எதிர்ப்பை நிரூபித்து, அவர்களுடன் ஒட்டியும் உறவாடியும் செல்லும் முயற்சியின் கூக்குரலாகவே தெரிகிறது.

    தமிழக மக்கள் திமுக அரசின் ஊழல், 36% கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம், நிர்வாகத் தோல்வி மற்றும் அகந்தைக்கு எதிராகவே வாக்களித்தார்கள். "திராவிட மாடல்" என்ற பெயரில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல, "கமிஷன் மாடல்" அரசியல் என்ற உணர்வு மக்களிடையே வலுவாக உருவானது.

    அதிலும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் அரசியல் தோல்வி, நிர்வாக முதிர்ச்சியின்மை மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய நிலை திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கான அரசியல் தண்டனையைத்தான் மக்கள் தேர்தலில் வழங்கியுள்ளனர்.

    Advertisement

    இன்று தமிழக அரசியலில் மக்கள் கேட்கும் கேள்வி வேறு.
    மே 4 தேதி மாலை
    பாஜகவை எதிர்ப்பதாக பேசிக் கொண்டே, பாஜகவுடனும் அதிமுகவுடனும் திமுக நடத்திய மறைமுக அரசியல் பேரங்கள் என்ன?

    மக்கள் அளித்த தீர்ப்பை தடுக்கவும், அரசியல் மாற்றத்தை தாமதப்படுத்தவும் நடைபெற்ற ரகசிய முயற்சிகள் என்ன?

    இப்போது அன்பு தலைவர் ராகுல் காந்தி பற்றி பேசுகிறார்கள்.

    தலைவர் ராகுல் காந்தி அதிகாரத்திற்காக அரசியல் செய்பவர் அல்ல.
    பதவிக்காக கொள்கையை விற்கும் தலைவர் அல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும், அதானி ஆதிக்கத்தையும், ஜனநாயக அமைப்புகளின் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து எதிர்த்து நிற்கும் தேசிய தலைவர் அவர்.

    Advertisement

    என் அன்புத் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நேர்மை, தியாகம் மற்றும் அறிவைப் பற்றி பேசுவதற்கு முதலில் அதற்கான தகுதியும் அரசியல் ஒழுக்கமும் வேண்டும். தினமும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, வெளியில் ஒரு பேச்சும் உள்ளே ஒரு பேரமும் நடத்துபவர்களுக்கு அவரது மதியைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

    மக்களின் தீர்ப்பை மதித்து சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருந்தால் திமுகவின் வீழ்ச்சி மேலும் வேகமாகும். மக்கள் ஏற்கனவே ஒரு செய்தியை தெளிவாக சொல்லிவிட்டார்கள்:

    ஊழல், கமிஷன், இரட்டை வேடம் மற்றும் அதிகார அகந்தைக்கு தமிழகத்தில் இனி இடமில்லை.

    Advertisement

    .#திருட்டுமாடல்

    இவ்வாறு மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    தமிழகத்திலும் தேசிய அளவிலும் தற்போதைய அரசியல் களம் வழக்கத்திற்கு மாறான ஒரு பரபரப்பான சூழலைச் சந்தித்து வருகிறது. சமீபத்திய தேர்தல் அதிர்வுகளுக்குப் பிறகு, "ராகுல் காந்தி, பா.ஜ.க.வுடன் நெருங்கிப் பழகுகிறார், ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளார்" என்ற ஒரு விசித்திரமான, அதே சமயம் மிகக் கடுமையான அரசியல் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் மற்றும் சில முற்போக்கு சக்திகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

    ராகுல் காந்தியின் அரசியல் பிம்பத்தை சிதைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த "நச்சுத் தாக்குதலை" (Venomous Attack) காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

    ராகுல் காந்தியின் மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைக் கண்டு பொறுக்க முடியாத சில சக்திகளே, இத்தகைய கற்பனையான 'நச்சு'க் கதைகளைத் தயாரித்து வருகின்றன.

    'இது தனிநபர் மீதான தாக்குதல் அல்ல, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்'
    "எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் பாசிச சக்திகளின் கைகளில் சிக்கி, ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் தங்களை அறியாமலேயே ஜனநாயகத்தின் அடித்தளத்தை அரித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று எம்பிக்கள் எச்சரித்துள்ளனர்.

    English Summary

    Congress MP Manickam Tagore has strongly responded to a Murasoli editorial titled “Rahul Dug His Own Pit,” which criticized Congress leader Rahul Gandhi. The rebuttal has added a fresh dimension to the ongoing political exchange between Congress and DMK circles, drawing attention from party cadres and political observers alike.