விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு!

  • சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. தவெக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இந்த இடத்திற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், சட்டமன்ற தேர்தலில் மயிலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றதால், தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக உள்ள அந்த எம்பி பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட தவெக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில் அந்த ஒரு எம்பி இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு தவெக ஒதுக்கியது. அந்த எம்பி பதவிக்கு ராகுல் காந்தி மற்றும் விஜய்யின் நண்பராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தியை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

    Advertisement

    ராஜ்யசபா தேர்தல்

    தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல், கர்நாடகத்தில் இருந்து மல்லிகார்ஜூனா கார்கே, பவன் கெரா உள்ளிட்டோரும் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அதிமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம், சட்டசபைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலியிடத்திற்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட தவெக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது.

    Advertisement

    மல்லிகார்ஜுன கார்கே, பவன் கெரா..

    இருப்பினும், அந்த இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கோரிக்கை வைத்தது. முதல்வர் விஜய்யை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த இடத்தை காங்கிரஸுக்கு வழங்குவதாக முதல்வர் விஜய் அறிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாநிலங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்நாடகத்தில் மல்லிகார்ஜூனா கார்கே, பவன் கெரா, மன்சூர் அலி கான், மத்தியப் பிரதேசத்தில் மீனாட்சி நடராஜன், ராஜஸ்தானில் நீரஜ் டாங்கி மற்றும் ஜார்க்கண்டில் பிரணவ் ஜா ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    Praveen Chakravarty: The Congress has announced Praveen Chakravarty as its candidate for the Rajya Sabha election from Tamil Nadu. The seat had been allotted to the Congress by the ruling TVK alliance following the vacancy of one Rajya Sabha berth.